புகையிலை கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியா் டாக்டா் அருண்தம்பு ராஜ் தலைமையில் நடந்தது.
நாகை ஆக 5
நாகப்பட்டினம் மாவட்டம் புகையிலை கட்டுப்பாட்டு மைய மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது
மாவட்டத்தில் புகையிலை கண்காணிப்பு ஒருங்கிணைப்பு குழு அமைத்து (COTPA) கோட்பா சட்டத்தின் கீழ் புகையிலை பொருள்களின் விற்பனையை கண்காணிக்க வேண்டும். 2023 ஆம் ஆண்டிற்குள்
கட்டாயமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளையும் புகையிலையில்லா கல்வி நிறுவனங்களாக உருவாகி இருக்க வேண்டும். பொது இடங்களில் புகைப்பிடித்தல் மற்றும் கல்வி நிலையங்களை சுற்றி புகையிலை பொருள்கள் விற்பனை செய்தால் உடனடியாக மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். புகையிலை பொருள்களின் சுகாதார எச்சரிக்கை வெளியிட்ட சமீபத்திய புகைப்படம் உள்ளதா என ஆய்வு செய்து நடவடிக்கை
மேற்கொள்ள வேண்டும். புகையிலை தொழிலாளர்களை மாவட்டம் முழுவதும் கண்டறிந்து அவர்களுக்கு தேசிய கிராமபுற வாழ்வாதர திட்டத்தின் மூலம் தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புகையிலை பயிரிடும் விவசாயிகளை கண்டறிந்து அவர்களுக்கு மாற்று பயிரிடுதலுக்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

கூட்டத்தில் துணை இயக்குநர் சுகாதார பணிகள் டாக்டா் விஜயகுமார் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து மேலும்
04365 -253036 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்

