நாட்டின் 75வது சுதந்திர தின அமுத விழா அனைத்து வீடுகளிலும் இந்திய தேசிய கொடி ஏற்ற நடவடிக்கை
நாகை ஆக 5
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 75வது சுதந்திர தின அமுத பெருவிழாவினை சிறப்பாக
கொண்டாடும் வகையில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பகுதிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் எதிர்வரும் ஆகஸ்ட் 13 தேதி முதல் 15 தேதி வரை இந்திய தேசியக்கொடி (மூவர்ண கொடி) ஏற்றிட மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து வீடுகளுக்கான கொடிகள் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பணியாளர்கள் மூலம் ஒவ்வொரு வீடுகளுக்கும் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அக்கொடியினை பெற்றுக்கொண்டு ஆகஸ்ட் 13 முதல் 15 வரை ஒவ்வொருவரும் தங்கள் வீட்டில் தேசியக்கொடியினை ஏற்றி நாட்டிற்கு பெருமை சேர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
அதேபோல் அரசுக்கு சொந்தமான கட்டிடங்களில் ஆகஸ்ட் 11ம் தேதி முதல் 15ம் தேதி வரை ஒளிரும் தேசியக்கொடி அமைக்கப்படவுள்ளது. தனியார் கட்டிட உரிமையாளர்கள் மற்றும் வணிகர்கள் தங்களது கட்டிடங்களில் மேற்கண்ட நாட்களில் நமது நாட்டின் தேசிய கொடியினை ஏற்றி பெருமை சேர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பின்னர்
இந்த தேசிய கொடியினை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்
டாக்டர் அருண்தம்புராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்.

