நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் விலைவாசி உயர்வை கண்டித்தும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சோனியா காந்தி ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பாக மாட்டுக்கு மனு கொடுக்கும் நூதன கண்டன ஆர்ப்பாட்டம்.
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 5
நாகப்பட்டினத்தை அடு
த்த நாகூரில் விலைவாசி உயர்வை கண்டித்தும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சோனியா காந்தி ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடுவதை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பாக மாட்டுக்கு மனு கொடுக்கும் நூதன கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில விவசாய அணி செயலாளர் நாகை மீரா உசேன் தலைமை தாங்கினார் நாகூர் நகர கமிட்டி காங்கிரஸ் கமிட்டி தலைவர் சர்புதீன் மரைக்காயர் மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் முகமது ரபிக்,நாகை நகரமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன் முகமது நத்தர் மாவட்ட சிறுபான்மை துறை தலைவர் மசூது சாஹிப் ,இளைஞர் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர் யூசுப் மாலிம்,
அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் பந்தல் சந்தானம் காங்கிரஸ் மாவட்ட செயலாளர் சிம்ரா ரபீக் முன்னிலை
வகித்தனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில செயலாளர் நெளஷாத்கண்டன உரையாற்றினார்.மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

