நாகை மாவட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் திறப்பு விழா மற்றும் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா
நாகை ஆக 4
நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ. 2 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் சிக்கல், கீழ்வேளுர், திருக்குவளை, கீழையூர், வேளாங்கண்ணி, நீர்முளை, வாய்மேடு, கரியாப்பட்டினம் ஆகிய இடங்களில் துணை வேளாண் விரிவாக்க மையகட்டிடம் திறப்பு விழா மற்றும் ரூ. 5 கோடியே 60 இலட்சம் மதிப்பீட்டில் வேளாண்மை விரிவாக்க கட்டிட மைய புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தாட்கோ கழக தலைவர் மதிவாணன், கீழ்வேளுர் எம்.எல்.ஏ நாகை மாலி ஆகியோர் முன்னிலை வகித்தனார்.


பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேளாண்மைத்துறைக்கென பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக மத்திய அரசு மற்றும் மாநில அரசு பங்களிப்புடன் செயல்படும் திட்டங்களாக வேளாண்மை துணை இயக்கத் திட்டத்தின் கீழ் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் அரசு மான்யத்தில் வழங்குதல் திட்டம் – தனி நபர் மான்யம் வேளாண்மையில் நவீன இயந்திரங்கள் மற்றும் கருவிகளை பிரபலப்படுத்தி உபயோகப்படுத்துவதன் மூலம் கூடுதல் பண்ணை சக்தியை வழங்கிடவும் வேளாண் பணியாளர்கள் பற்றாக்குறையை நிவர்த்தி செய்திடவும், பணிகளை குறித்த காலத்தில் விரைந்து முடித்திடவும், பண்ணை செலவுகளைக் குறைத்திடவும் 8 முதல் 70 குதிரைத்திறன் வரையிலான பவர் டில்லர்கள், டிராக்டர்கள் 4 முதல் 8 வரிசை வரையிலான நெல் நாற்று நடும் இயந்திரங்கள், கூட்டு அறுவடை இயந்திரங்கள், வைக்கோல் கட்டு கட்டும் இயந்திரங்கள், விசைகளை எடுக்கும் இயந்திரங்கள், சுழற்கலப்பைகள், விசைத் தெளிப்பான்கள், டிராக்டரால் இயங்கக் கூடிய இன்ன பிற பண்ணை இயந்திரங்கள், கருவிகள் மற்றும் மனிதத் தோழமைக் கருவிகள் போன்றவை பெரிய விவசாயிகளுக்கு 40 சதவீத மான்யம் மற்றும் சிறு, குறு, பெண் ஆதிதிராவிட விசவாயிகளுக்கு 50 சதவீத மான்யத்தில் வழங்கப்பட்டு வருகிறது. முதலமைச்சரின் சூரிய ஒளி மூலம் இயங்கும் மோட்டார் பம்புகள் அரசு மான்யத்தில் அமைத்தல் திட்டம்: மத்திய அரசின் பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான திட்டத்தின் கீழ் சூரிய ஒளி மூலம் இயங்கும் 5 சதவீத 10 குதிரைத் திறன் வரையிலான மின் மோட்டார் பம்புகள் தற்போது 70 சதவீத அரசு மான்யத்தில் அமைத்தல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இப்பம்புகள் திறந்த வெளி கிணற்றுக்கு 145 அடி வரையும், ஆழ் குழாய் கிணற்றுக்கு 490 அடி வரையும் நீர் இறைக்கும் திறன் கொண்டது. சூர்ய கூடார உலர்த்திகள் அரசு மான்யத்தில் அமைத்திட திட்டம்: வேளாண் விளை பொருள்களை அறுவடைக்குப் பிறகு சூரிய வெப்பத்தை பயன்படுத்தி பாதுகாப்பான கூடாரங்களில் உலர வைத்து சந்தையில் மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்ய ஏதுவாக பாலிகார்பனேட் தகடுகளான பசுமைக் குடில் வகை சூர்ய கூடார உலத்திகள் விவசாயிகளின் தேவைக் கேற்பவும், இட வசதிக் கேற்பவும் 400 முதல் 1000 சதுர அடி வரையிலான பரப்பளவில் அமைத்துத் தரப்படுகிறது. அனைத்து வகை விவசாயிகளுக்கும் மொத்த விலையில் 40 சதவீத அல்லது அரசால் நிர்ணியிக்கப்பட்ட தொகைரூபவ் இதில் குறைவான தொகை மானயமாக வழங்கப்பட்டு வருகிறது. 400 சதுர அடி பரப்பளவு உள்ள கூடாரத்தில் 1டன் எடையுள்ள கொப்பரை தேங்காய், மிளகாய், நிலக்கடலை போன்றவற்றை காய வைத்துக்கொள்ள ஏதுவாகும். மாநில அரசுத் திட்டங்களான வட்டார அளவிலான வேளாண் வாடகை மையம் அமைத்தல் திட்டம்: விவசாயிகளுக்கு அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்கள் குறைந்த வாடகைக்குக் கிடைக்கும் வகையில் முன்னோடி விவசாயிகள், விவசாய சுய உதவிக் குழுக்கள், மற்றும் தொழில் முனைவோர்க்கு வட்டார அளவிலான ரூ. 25.00 இலட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள், கருவிகளைக் கொண்ட வாடகை மையங்கள் அமைக்க 40 சதவீத அல்லது அதிகபட்சமாக ரூ.10.00 இலட்சம் அரசு மான்யமாக வழங்கப்படுகிறது. கிராம அளவிலான வேளாண் வாடகை மையம் அமைத்தல் திட்டம், விவசாயிகளுக்கு அதிக விலையுள்ள வேளாண் இயந்திரங்கள் குறைந்த வாடகைக்குக் கிடைக்கும் வகையில் முன்னோடி விவசாய குழுக்கள் மற்றும் மகளிர் குழுக்களுக்கு, கிராம அளவிலான ரூ.10.00 இலட்சம் மதிப்பிலான வேளாண் இயந்திரங்கள், கருவிகளைக் கொண்ட வாடகை மையங்கள் அமைக்க 80 சதவீத அல்லது அதிகபட்சமாக ரூ. 8.00 இலட்சம் அரச மான்யமாக வழங்கப்படுகிறது.
அறுவடைக்குப் பிந்தைய தொழில் நுட்ப மேன்மைத் திட்டத்தின் கீழ் வேளாண் விளை பொருட்கள் மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் வேளாண் இயந்திரங்கள் அரசு மான்யத்தில் வழங்குதல் திட்டம்: தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உற்பத்தி செய்யப்படும் விளை பொருள்களை மதிப்புக் கூட்ட ஏதுவான இயந்தரங்காளன நிலக்கடலை தோல் நீக்கும் இயந்திரம், தேங்காய் மட்டை உரிக்கும் கருவி, எண்ணெய் செக்கு, சிறிய வகை நெல் அரவை இயந்திரம், பருப்பு உடைக்கும் இயந்திரம், தானியம் மாவு அரைக்கும் இயந்திரம் போன்ற இயந்திரங்கள் 40 சதவீத அரசு மான்யத்தில் வழங்கப்படுகிறது. பழைய மின் மோட்டார்களை மாற்றியமைத்தல் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட நீர் ஆதாரங்களில் புதிய மின் மோட்டார் அமைத்தல் திட்டம்: அரிய மின் சக்தி விரயத்தை தவிர்க்க ஏதுவாக பழைய மின் மோட்டர்களை மாற்றிமைத்தல் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட நீர் ஆதாரங்களில் புதிய மின் மோட்டார்கள் அனைத்து மான்யத்தில் அமைத்துக் கொடுக்கப்படுகிறது. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்: இத்திட்டத்தின்
கீழ் வேளாண்மை பொறியியல் துறை இயந்திரங்களின் மூலம் குளங்கள்ஃ ஊரணிகள் (வரத்து வாய்க்கால் உள்பட) தூர் வாருதல் மற்றும் பண்ணைக் குட்டைகள் அமைத்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் வேளாண்மை இணை இயக்குநர் ஜாக்குலா அகண்டராவ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெங்கடேசன்ரூபவ் வேளாங்கண்ணி பேரூராட்சி துணை தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், ஊராட்சி மன்ற தலைவர் பழனியப்பன், உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்

