நாகப்பட்டினத்தில் நவீன மீன் விற்பனை நிலையம் திறப்பு விழா –மீன்வளர்ச்சி கழகத் தலைவா் கௌதமன் திறந்து வைத்தார்.
நாகை ஆக 4
நாகப்பட்டினத்தில் நவீன மீன் விற்பனை நிலையத்தினை தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், நாகப்பட்டினத்தில் நவீன மீன் விற்பணை நிலையத்தினை தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் திறந்து வைத்தார். வருவாய் கோட்டாச்சியர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

பின்னர் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் தெரிவித்ததாவது:
கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திட ஏதுவாக மறுகட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ள கஜா புயல் மறுக்கட்டமைப்பு, மறுவாழ்வு, புணரமைப்பு திட்டத்தினை 75சதவீத மானிய உதவியுடன் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் சுகாதார முறையில் மீன் விற்பனை செய்திடவும் மக்களுக்கு புரதசத்து மிகுந்த தரமான மீன் உணவுகள் வழங்கிடவும் ரூ. 10 இலட்சம் மதிப்பீட்டில் நவீன மீன் விற்பணை நிலையம் அமைத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதன்படி நாகப்பட்டினம் மாவட்டத்தில் நவீன மீன் விற்பனை நிலையம் அமைத்திட 2 எண்ணிக்கை அலகுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அவற்றில் முதல் கட்டமாக வருவாய் கோட்டாச்சியர் அலுவலகம் எதிரில் நவீன மீன் விற்பனை நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இந்த மீன் விற்பனை நிலையம் கடல் மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மூலம் செயல்படுத்தப் படவுள்ளது. இந்த மீன் விற்பனை நிலையத்தில் தரமான கடல் மீன்களும், கடல் மீன் உணவுகளும் மற்றும் மதிப்பூட்டப்பட்ட மீன் பொருள்களும் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் திரு.என்.கௌதமன் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நகர மன்ற தலைவர் மாரிமுத்து மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்

