கோடியக்கரை கடற்கரைக்கு ரப்பர் படகில் வந்த போலந்து நாட்டைச் சேர்ந்தவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை.
வேதாரண்யம் ஆகஸ்ட் 3
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயம் உள்ள முனைக்காடு கடற்கரையில் கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி யாரும் இல்லாமல் ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. கரை ஒதுங்கிய படகை கைப்பற்றிய கடலோர காவல்படையினர் அது குறித்து விசாரித்து வந்தனர். அன்று இரவு வேதாரண்யம் நகராட்சிக்குட்பட்ட ஆறுகாட்டுத்துறை பகுதியில் சந்தேகத்துக்கு உரிய முறையில் நடமாடிய நபரை பிடித்து விசாரித்ததில் அவர் போலந்து நாட்டைச் சேர்ந்த வாடட்ஸ்மே
என்று தெரியவந்தது.

இவர் தான் இலங்கையில் இருந்து காற்று நிரப்பி நீரில் செல்லும் படகில் வந்தவர் என்பது தெரிய வந்தது. பாஸ்போர்ட் இல்லாமல் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார் . மீண்டும் இன்று அவர் வேதாரணியம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு மூன்று நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க
அனுமதிக்கப்பட்டார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

