வேதாரண்யம் அருகே கடலில் படகு கவிழ்ந்ததால் தத்தளித்த இரண்டு இலங்கை மீனவர்களை வரும் 17ம் தேதி வரை சென்னை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவு.
வேதாரணியம் ஆகஸ்ட் 3
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த சிறுதலைக்காடு என்ற இடத்தில் இலங்கை மீனவர்கள் 2 பேர் நீந்தி கரை சேர்ந்தனர்.
இலங்கை மீனவர்கள் ரிஷிகேஷ், ஜனார்த்தனன் ஆகிய இரண்டு பேர் இலங்கையில் இருந்து மீன்பிடிக்க படகில் வந்தவர்கள் பலத்த காற்று வீசியதால் படகு கவிழ்ந்து டீசல் கேன் உதவியுடன் இரண்டு மீனவர்கள் கரைக்கு வந்தனர் .
2 மீனவர்கள் இடமும் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் வேதாரணியம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட 2 இலங்கை மீனவர்களையும் வரும் 17ஆம் தேதி வரை சென்னை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல் விஸ் லாய்
மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

