புதிய வழிதடத்தில் பேருந்து இயக்கம் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் துவங்கி வைத்தார்
நாகை ஆக 3
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம் வடகரை கிராமம் முதல் திருவாரூர், நாகப்பட்டினம் என்ற புதிய வழித்தடத்தில் பேருந்தினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தாட்கோ தலைவர் மதிவாணன், கீழ்வேளுர் எம்.எல்.ஏ நாகை மாலி ஆகியோர்கலந்துகொண்டனர்.
மேலும் மாவட்ட ஆட்சியர் கூறியதாவது:
தமிழக முதலமைச்சர் ஏழை எளிய மக்களுக்கென பல்வேறு நலதிட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். தமிழக முதலமைச்சர் ஆட்சிப்பொறுப்பெற்ற உடனே பெண்களுக்கு இலவச பேருந்து பயணத் திட்டத்தினை அறிமுகப்படுத்தி செயல்படுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து கீழ்வேளுர் தொகுதிக்குட்பட்ட வடகரை கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்கள் போக்குவரத்திற்கு வழிவகை செய்யும் வகையில் வடகரை கிராமத்தில் இருந்து கீழ்வேளுர், திருவாரூர் மற்றும் வடகரை கிராமத்தில் இருந்து கோகூர், ஆணைமங்கலம் வழியாகநாகப்பட்டினம் வரை புதிய வழித்தடத்தில் பெண்களின் நலன் கருதி இலவச பயணம் செய்யும் வகையில் நகர பேருந்து இயக்கப்படுகிறது.

இப்பேருந்து திருவாரூரில் இருந்து வடகரைக்கு காலை 06.45 மணிக்கும், மதியம் 12.15, மாலை 4.45 மணிக்கும், வடகரையிலிருந்து நாகப்பட்டினத்திற்கு காலை 8.00 மணிக்கு மாலை 6.00 மணிக்கும், திருவாரூக்கு மதியம் 1.15 மணிக்கும் என நாள் ஒன்றுக்கு 6 முறை இயக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் பொதுமேலாளர் மகேந்திரக்குமார், கீழ்வேளுர் ஒன்றிய குழு தலைவர் வாசுகி நாகராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாண்டியன், கோபாலகிருஷ்ணன், ராஜேந்திரன் உட்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்

