ஆலோசனைக் கூட்டம்
நாகை ஆக 1
இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் விபரங்களை இணைப்பது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரும் தங்களது ஆதார் எண் விபரங்களை வாக்காளர் பட்டியலுடன் இணைப்பதற்கு உரிய சட்ட திருத்தத்தினை கொண்டு வந்துள்ளது. மேற்படி பணியானது 01.08.2022 முதல் தொடங்கி 01.04.2023-க்கு முன்னதாக முடித்திட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஆதார் எண் பெறுவதன் நோக்கமானது வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்கல், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் தனி தகவல்களை உறுதிபடுத்துதல் மற்றும் பாதுகாத்தல், ஒரு வாக்காளரின் விபரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விபரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்த்தல் ஆகும். மேலும் வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண் விபரங்களை பெறுதல் என்பது முழுவதும் வாக்காளர்களின் தன்விருப்பத்தின் அடிப்படையிலானது என மேற்படி சட்ட திருத்தம் உறுதி செய்துள்ளது.
வாக்காளர்கள் நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் மொபைல் செயலிகள் மூலம் இணையவழியாகவும் அல்லது வாக்காளர்கள் படிவம் 6பி-யினை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடமோ அல்லது வட்ட அலுவலகங்களிலோ அளித்து ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து கொள்ளலாம்.
எனவே இந்திய தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்ட இத்திட்டத்தினை எவ்வித தொய்வின்றி 100 சதம் செயல்படுத்திட பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்கி வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைத்துக்கொள்ள நாகப்பட்டினம் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ. அருண் தம்புராஜ், தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, வருவாய் கோட்டாச்சியர்கள் முருகேசன் (நாகப்பட்டினம்), ஜெயராஜபௌலின் (வேதாரண்யம்), தனிவட்டாச்சியர்(தேர்தல்) பிரான்சிஸ் மற்றும் அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர்.செய்தி தொகுப்பு டாக்டர்.எல்விஸ் லாய்
மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

