• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

உலக தாய்ப்பால் வார விழா – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
August 1, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
உலக தாய்ப்பால் வார விழா – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

உலக தாய்ப்பால் வார விழா – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

நாகை ஆக 1

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக தாய்ப்பால் வார விழாவினை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தாதவது:

தாய்ப்பாலின் உன்னதத்தை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக உலகெங்கும் உலக தாய்ப்பால் வார விழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலை சிறப்பாக அமைய முதல் உன்னதமான ஊட்டச்சத்து தாய்ப்பால் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே தான், தாய்ப்பாலின் மகத்துவத்தை அனைவரும் உணர வேண்டும் என‘உலகதாய்ப்பால் வாரம்’ ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல் வாரம் உலகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

குழந்தை பிறந்து ஆறுமாதங்கள் வரைதாய்ப்பால் மட்டுமே கொடுக்கப்படும் குழந்தைகள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி பெறுவதோடு வயிற்றுப்போக்கு மற்றும் சுவாச கோளாறு தொடர்பாக நோய்களிலிருந்து பெருமளவு பாதுகாக்கப் படுகிறார்கள்.

அத்தகைய குழந்தைகளுக்கு நோய்களான உயர் ரத்தஅழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவை வரும் வாய்ப்பு குறையும். குழந்தை பிறந்த இரண்டு வருடத்திற்குள் மூளை 80 சதவீதம் வளர்ச்சி அடைகிறது. இச்சமயத்தில் தாய்ப்பால் ஊட்டுதல் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு மிக முக்கியமான அடித்தளமாக அமையும். இரண்டு வயது வரை தாய்ப்பால் பெரும் குழந்தைகளின் உணர்ச்சி திறன் சிறப்பானதாக இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் தாய்ப்பாலின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு கண்காட்சியினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தும், ஆரோக்கியமான குழந்தைகள் வளர்ச்சி போட்டியில் பங்கேற்ற குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பரிசு பெட்டகத்தினை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் (பொறுப்பு) தமிமுன்னிசா, வட்டார மேற்பார்வையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி சேகரிப்பு

டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா

நாகை மாவட்ட செய்தியாளா்

Previous Post

புதுக்கோட்டையை சார்ந்த பவானியா, டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் வெற்றி: காவல் துணைக் கண்காணிப்பாளர் பணிக்கு தேர்வாகிய தமிழ் வழிக் கல்வி மாணவி!  கிராம மக்கள் வாழ்த்து!! 

Next Post

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் விபரங்களை இணைப்பது தொடர்பாக நாகை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

Next Post
வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் விபரங்களை இணைப்பது தொடர்பாக நாகை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் விபரங்களை இணைப்பது தொடர்பாக நாகை மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In