தூத்துக்குடி மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்த தனிநபர் : அதிரடியாக மீட்டெடுத்து திருச்செந்தூர் செல்லும் பாதசாரிகளுக்கு
ஓய்வு எடுக்கும் பூங்கா அமைக்க முடிவு செய்த மேயர்!
பொதுமக்கள் சார்பில் குவியும் பாராட்டுக்கள்!!
தூத்துக்குடி
ஜூலை 31
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற நாள் முதல் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் ஆய்வுகள் மேற்கொண்டு
அனைத்து பகுதிகளின் வளர்ச்சிக்கும் முழுமையாக பணியாற்றி வருகிறாhர். குறிப்பாக தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் மழைக்காலங்களில் பொது மக்கள் இதுவரை அவதிப்பட்டு வந்தது அனைவரும் அறிந்ததே அதற்கு முடிவு கட்டும் வகையில் மழைநீர் வடிகால் பணிகள் விஷயத்தில் தனி கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் மேயர் ஜெகன் பெரியசாமி.
தினமும் பொதுமக்களை சந்தித்து தனது அலுவலகத்திள்ள உதவியாளர் மூலம் வரும் மனுக்களுக்கு குறைகளை தீர்க்கும் வகையில் அதிகாரிகளுடன் இனைந்து பணியாற்றி வரும் மேயர் பொதுமக்கள் சார்பில் மேயர் கவனத்திற்கு வரும் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த அடிப்படையில் முத்தையாபுரம் ரவுண்டா பகுதியில் உப்பாத்து ஓடைக்கு அருகில் இரண்டரை ஏக்கர் மாநகராட்சியிடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மேயருக்கு தகவல் கிடைக்க பெற்றதையடுத்து அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு மேற்கொண்டு அந்த இடம் தற்போது மீட்கப்பட்டுள்ளது. கடந்த 29ம் தேதி மாநகராட்சியில் நடைபெற்ற கூட்டத்தில் அந்த இடத்தில் பல மாவட்டங்களிலிருந்து பாதசாரிகளாக திருச்செந்தூருக்கு நடந்து வரும் பக்தர்களுக்கும் வாகனங்களில் வருபவர்களுக்கும் ஓய்வு எடுக்கும் வகையில் அந்த இடத்தில் கழிப்பிட வசதி பூங்கா ஓய்வு அறை என அனைத்து கட்டமைப்பு வசதிகளும் பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க செய்து கொடுக்கப்படும் என்று மேயர் கொண்டுவந்த தீர்மானத்திற்கு திமுக அதிமுக காங்கிரஸ் மதிமுக கம்யூனிஸ்ட் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் மாமன்ற உறுப்பினர்கள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து 30ம் தேதி அந்த இடத்தை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது
தெற்கு மண்டல உதவி ஆணையர் ராமசந்திரன், மேயர் நேர்முக உதவியாளர் ரமேஷ், மற்றும் மேயர் உதவியாளர் பிரபாகர், ஜோஸ்பர், உடனிருந்தனர்.
இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி பணியாற்றி வரும் நிலையில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடம் மட்டுமின்றி கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டிய கடமை மாநகராட்;சி நிர்வாகத்திற்கு உண்டு என்ற அடிப்படையில் சித்திரை மாதம் தூத்துக்குடியில் நடைபெற்ற பிரதிபெற்ற சங்கரராமேஸ்வரர் பாகம்பிரியாள் திருக்கோவில் தேரோட்டத்தை யொட்டி அப்பகுதியில் தேவையற்ற ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட்டு சாலை மணல்கள் அப்புறப்படுத்தி இடையூறாக இருந்த மரக்கிளைகள் வெட்டப்பட்டு நான்கு ரத வீதிகளிலும் தேர் வந்து செல்வதற்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் 5ம் தேதி நடைபெறவுள்ள உலகபுகழ் பெற்ற பனிமயமாதா பேராலய திருவிழா நடைபெறும் நிலையில், அப்பகுதியில் மாநகராட்சி சார்பில் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆன்மீஆன்மீக அமைப்பு சார்ந்த இடங்களுக்கு பல வெளிமாவட்டத்திலிருந்து வரும் பக்தர்களுக்கு ஒய்வு அறை உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வரப்பெற்றிருந்த நிலையில், மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்திருந்ததை கண்டறிந்து தற்போது அதனை மீட்டுள்ளோம். அந்த இடத்தில் சகல வசதிகளும் செய்து கொடுத்து பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் காவலர்களும் நியமிக்கப்படவுள்ளன. எம்மதமும் எங்களுக்கு சம்மதம் மக்கள் பணிதான் முக்கியம் என்ற கடமை உணர்வோடு பணியாற்றி வருகிறோம் என மேயர் கூறினார். மேயரின் இந்த தொடர் அதிரடி நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பல தரப்பினரும் மனதார பாராட்டு தெரிவித்துள்ளனர்.
செய்தி தொகுப்பு
எம். ஆத்தி மூத்து

