வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை காவல்துறையினர் தீவிர விசாரணை
வேதாரண்யம் ஜூலை 31
நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த தோப்புத்துறையில் முருகானந்தம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுற்றுலாவுக்காக கொடைக்கானல் சென்றுள்ளார் .இன்று காலையில் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.மேலும் அவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். பின் வீட்டில் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் கதவுகளை உடைத்து ஒன்பது சவரன் நகைகள் ரூ 40 ஆயிரம்
ரொக்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சி உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து கொள்ளையர்கள் தப்பி ஓடியது தெரிய வந்தது.



இதைப்பற்றி காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த திருட்டு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

