• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஆரோக்கியமான கல்லீரல் , மகிழ்ச்சியான வாழ்க்கை ” கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் கல்லீரல் விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி: காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

policeseithitv by policeseithitv
July 31, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஆரோக்கியமான கல்லீரல் , மகிழ்ச்சியான வாழ்க்கை ” கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் கல்லீரல் விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி:  காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன்  துவக்கி வைத்தார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆரோக்கியமான கல்லீரல் , மகிழ்ச்சியான வாழ்க்கை ” கேஎம்சிஹெச் மருத்துவமனை சார்பில் கல்லீரல் விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி:

காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன்

துவக்கி வைத்தார்

 

கோவை ஆகஸ்ட் 1

 

 

கோவையில்

ஆரோக்கியமான கல்லீரல் , மகிழ்ச்சியான வாழ்க்கை ” என்பதை வலியுறுத்தி

விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி நடைபெற்றது. வருகிற

31.07.2022 ஜூலை 29 – ம் தேதி உலக ஹெபடைடிஸ் தினம் அனுசரிக்கப்பட்டது . இதனையொட்டி கல்லீரல் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ” ஆரோக்கியமான கல்லீரல் , மகிழ்ச்சியான வாழ்க்கை ” என்ற கருத்தில் ஜூலை 31 , 2022 தேதி அன்று

கேஎம்சிஹெச், சார்பில் வாக்கத்தான்

பேரணி நடைபெற்றது.

ரேஸ்கோர்ஸ் சிஎஸ்ஐ மெட்ரிகுலேஷன் பள்ளியில் இருந்து துவங்கிய இந்த பேரணி கேஎம்சிஹெச் மருத்துவமனை செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி முன்னிலையில், கோவை நகர காவல்துறை ஆணையர் திரு வி. பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்தார் . இந்த நிகழ்ச்சியில் கல்லீரல் மாற்றும் அறுவை சிகிச்சை செய்துகொண்ட மற்று கல்லீரல் நோய்க்கு சிகிச்சை பெற்றுவருவோர் சுமார் 200 பேர் , மருத்துவர்கள், மற்று செவிலியர்கள், அடங்கிய கேஎம்சிஹெச் கல்லீரல் அறுவை சிகிச்சை குழுவினர், மாணவர்கள், கேஎம்சிஹெச் மருத்துவக் கல்லூரி மாணவர்கள்,மற்றும் பொதுமக்க கலந்துகொண்டனர் . இந்த நிகழ்ச்சி மூலம் கல்லீரல் நோய் ஏற்படக்கூடிய அபாய காரணிகள் , நோய் வராமல் தற்காத்துக் கொள்வது , குறித்த காலத்தில் சிகிச்சை எடுத்துக்கொள்வது ,ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புண ஏற்படுத்தப்பட்டது . கல்லீரல் வீக்கம் , ஹெபடைடிஸ் வைரஸ் காய்ச்சல் , மதுப்பழக்கம் ஆகியவையே, அதிகரித்துவரும் கல்லீரல் நோய்களுக்கு காரணங்களாக கூறப்படுகின்றன . கல்லி நோய்க்கு ஆரம்ப நிலையில் அறிகுறிகள் எதுவும் தெரியாது . மஞ்சள் காமாலை ,

காலவீக்கம் , அடிவயிறு வீக்கம் , இரத்தவாந்தி எடுத்தல் , நினைவிழத்தல் ,முதலானவை கல்லீரல் செயல் இழப்பைக் குறிக்கும்,அறிகுறிகள் ஆகும். இதுபோன்ற சிக்கலான நிலையில் உடனடி கல்லீரல் மாற்று சிகிச்சை செய்யவேண்டும் .

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு ஹெபடைடிஸ் பி மற்றும் சி பரிசோதனைகள் செய்யப்பட்டது . முறையான உணவு மற்றும் உடற்பயிற்சிகள் மூலம்வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டது.

மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து விளக்கப்பட்டது. கே எம் சி ஹெச் மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன . தமிழகத்தின் மிகப்பெரும் கல்லீரல் மாற்று மையமாக விளங்கும் கேஎம்சிஹெச் மருத்துவமனையில் கல்லீரல் நோய்களுக்காக வருடம் சுமார் 6000 பேர் வெளி நோயாளிகளாகவும் 1000 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது . நிகழ்ச்சியில் உரையாற்றிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாரி விஜயராகவன் உலகின் முன்னணி மருத்துவமனைகளுடன் ஒப்பிடும் வகையில் கேஎம்சிஹெச் மருத்துவமனை அதிநவீன வசதிகளுடன் கல்லீரல் சிகிச்சை அளிக்கிறது என்று கூறினார் . வாக்கத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் சிலர் கேஎம்சிஹெச் மருத்துவமனையில் பலவிதமான கல்லீரல் சிகிச்சைகளை செய்துகொண்டு பலன் பெற்றவர்கள் என்று பெருமையுடன் குறிப்பிட்டார் . இளைஞர்களிடம் குறிப்பாக பெண்களிடம் கல்லீரல் நோய் அதிகரித்துவருவது கவலைக்குரியது என்று கேஎம்சிஹெச் செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி தெரிவித்தார் . கல்லீரல் நோய்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறப்பான மருத்துவ சேவைகளை அளித்துவரும் டாக்டர் பாரி விஜயராகவன் தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் மருத்துவ குழுவினரை அவர் பாராட்டினார் . ஆகஸ்ட் மாதம் முழுமையான கல்லீரல் பரிசோதனை முகாம் நடைபெறவுள்ளது . அதி கல்லீரல் பரிசோதனை , வைரஸ் ஹெபடைடிஸ் பரிசோதனை , அல்ட்ரா சவுண்ட் மற்று ஃபைப்ரோ ஸ்கேன் ஆகியவற்றை சலுகை கட்டணத்தில் பெற்று பலனடையலாம் என்று அவர் தெரிவித்தார் .

Previous Post

தூத்துக்குடி மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்த தனிநபர் : அதிரடியாக மீட்டெடுத்து திருச்செந்தூர் செல்லும் பாதசாரிகளுக்கு ஓய்வு எடுக்கும் பூங்கா அமைக்க முடிவு செய்த மேயர்!  பொதுமக்கள் சார்பில் குவியும் பாராட்டுக்கள்!! 

Next Post

15 வயது சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 4 குழந்தைக்கு தாயான 30 வயது இளம்பெண்.. போக்ஸோவில் கைது – அதிர்ச்சி !

Next Post
15 வயது சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 4 குழந்தைக்கு தாயான 30 வயது இளம்பெண்.. போக்ஸோவில் கைது – அதிர்ச்சி !

15 வயது சிறுவனுடன் வீட்டை விட்டு வெளியேறிய 4 குழந்தைக்கு தாயான 30 வயது இளம்பெண்.. போக்ஸோவில் கைது - அதிர்ச்சி !

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In