தமிழன்டா இயக்க தலைவர் ஜெகஜீவன் பல ஆண்டுகளாக வடை, பஜ்ஜி, சமோசா போன்ற பலகாரங்களை வாழை இலையில் வைத்து தான் சாப்பிட வேண்டும், நியூஸ் பேப்பரில் வைத்து சாப்பிடக்கூடாது, என்று தினந்தோறும் 100 பேருக்கு விழிப்புணர்வு வழங்கினார்.
இது குறித்து பல கடைகளுக்கு நேரடியாகவே சென்று அறிவுரை வழங்கினார். இந்த நியூஸ் பேப்பரில் வைத்து வடை, பஜ்ஜி, சமோசா வழங்குவதால் பொது மக்களுக்கு என்ன என்ன தீமைகள் ஏற்படுகிறது என்பது குறித்தும்.100க்கும் மேற்பட்ட நோய்கள் இதனால் உருவாகிறது. என்பது குறித்தும், சமீபத்தில்
” கருப்பு மை” என்கிற குறும்படத்தை உருவாக்கி அவரது நண்பர் அருந்ததி அரசு அவரை வைத்து இயக்கி குறும்படம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் திருகரங்களில் வெளியிட அது தூத்துக்குடியில் பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு துறையின்
பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் மாரியப்பன் மிகவும் உதவியாக இருந்து செயல்பட்டு இருக்கிறார். இந்த நிலையில் இந்த குறும்படம் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் வெளியிட்டு மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் விழிப்புணர்வு பெறுவதற்காகவும், மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் விழிப்புணர்வு பெறுவதற்காகவும் வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மாவட்ட கலெக்டர் டாக்டர் செந்தில்ராஜ் உடனடியாக நியூஸ் பேப்பரில் வடை பஜ்ஜி சமோசா வைத்து விற்பனை செய்யக்கூடாது. என்று உத்தரவு போட்டார். அதன் பின்னர் தூத்துக்குடியில் உள்ள பிரபல கடைகளில் சிறிய மாற்றம் வந்தது, அதன் பின்னர் பொதுமக்களை கேள்வி எழுப்ப ஆரம்பித்து விட்டனர்.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சித் தலைவர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள டீக்கடைகள்,வடை போடும் கடைகள் போன்ற கடைகளை நேரில் ஆய்வு செய்து அவர்களுக்கு வாழை இலையை அன்பளிப்பாக வழங்கி அறிவுரை கூறினார் இந்த நிலையில் மிகப்பெரிய ஒரு மாற்றத்தை கருப்பு மை குறும்படம் பாடத்தை தந்திருக்கிறது. ஆகையால் தமிழன்டா இயக்க தலைவர் ஜெகஜீவன் மற்றும் அவரது குழுவைச் சார்ந்த இயக்குனர் அருந்ததி அரசு போன்றோரை பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்கள் பாராட்டி வருகிறார்கள். கருப்பு மை என்ற குறும்படத்தின் வாயிலாக உணவு பண்டங்கள் நியூஸ் பேப்பரில் வைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நோய்கள் குறித்து தகவல்களை பாமர மக்களும் அறிந்திடும் வகையில் தமிழன்டா இயக்கம் சிறப்பாக செய்திருந்தது இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ஆகியோர் குறும்படத்தை கவனத்துடன் பார்த்து அதன்படி செயல் வடிவுக்கு கொண்டு வருவதற்கான உத்தரவிட்டு தூத்துக்குடி மக்களுக்கு நன்மை செய்துள்ளனர் தமிழக அளவில் மற்ற மாவட்டங்களுக்கு முன்னோடியாக தூத்துக்குடியில் இந்த சிறப்பான உத்தரவு பிறப்பித்த மாவட்ட ஆட்சியருக்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நன்றி தெரிவித்தது வருகிறார்கள்.

அதே சமயத்தில் கருப்பு மை குறும்படத்தை தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் ஒளிபரப்பவும் தொலைக்காட்சி வாயிலாக இதனை ஒளிபரப்பி தமிழகம் முழுவதும் உணவு பண்டமான வடை பஜ்ஜி போண்டா சம்சா போன்றவர்களை நியூஸ் பேப்பரில் வைத்து பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு வாழை இலை மூலம் பயன்படுத்த அரசு உத்தரவிட வேண்டும் எனவும் தூத்துக்குடி போல் பல மாவட்டங்களும் இதனை பின்பற்ற வேண்டும் என அரசு உத்தரவு பிறப்பிக்கும் என்றால் அது பொதுமக்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் நோய் நொடியின்றி பாதுகாக்கவும் உதவும் என்ன தற்போது அரசுக்கு கோரிக்கை எழுந்து வருகிறது கருப்பு மை குறும்படம் இயக்கியவர்களுக்கும் அதிரடி உத்தரவு பிறப்பித்த ஆட்சியர் அவர்களுக்கும் தூத்துக்குடி மக்கள் நன்றி தெரிவித்து கொள்கிறார்கள்
செய்தி தொகுப்பு
எம். ஆத்தி முத்து
போலீஸ் செய்தி

