மனித உலக கடத்தலுக்கு எதிரான தின விழிப்புணர்வு பேரணி –மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கிவைப்பு
நாகை ஜூலை 30
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் மனித உலக கடத்தலுக்கு எதிரான தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார். மேலும் நாகை எஸ்.பி ஜவகர், தலைமை குற்றவியல் நீதிபதி கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
மனித கடத்தல் என்பது பிச்சையடுக்க, மனித உறுப்புகளை திருட, வன்முறைகளில் ஈடுபடுத்திட, குழந்தைகளை கடத்தி பணம் பறிக்க, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை பாலியல் வன்முறைகளில் ஈடுபடுத்திடவும், நல்ல ஊதியத்துடன் வெளிமாநிலங்களில் வேலை வாங்கி தருவதாக கூறி கொத்தடிமைகளாக மனிதர்களை கடத்தும் செயலாகும். இதில் அதிகமாக ஏழைகள், கல்வியறிவு இல்லாதவர்கள், பெற்றோரின் அன்பு கிடைக்காதவர்கள், மகிழ்ச்சியற்ற சூழலில் வாழ்கிறவர்கள், வீட்டை விட்டு ஒடி வந்தவர்கள், வீதியில் தங்குகிறவர்கள் உடல் நலமும் மனநலமும் குன்றியவர்கள் போன்றவர்களை கடத்துவதே (மனிதகடத்தல்) ஆட்களைக் கடத்துகிறவர்களின் இலக்காகும். அவற்றை தடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30 தேதி உலக மனித கடத்தல் எதிர்ப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
மேலும் குழந்தை கடத்தல் குறித்த விவரங்கள் மற்றும் புகார்கள் 1098 என்ற குழந்தைகள் உதவி எண்ணிலும், இதர புகார்கள் காவல் துறையிலும் பெறப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். என மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்தார்.


இந்த பேரணியில் மாவட்ட சமூக நல அலுவலர் தமிமுன்னிசா. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலகு, சைல்ட் லைன், பள்ளிக் கல்விதுறை, தன்னார்வலர் தொண்டு நிறுவனம், மாவட்ட சட்ட பணிகள் நிர்வாகம், காவல்துறை, அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி மாணவர்கள் உட்பட அரசு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்

