வேதாரணியம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு பொதுக்குழு கூட்டம் .
வேதாரண்யம் ஜூலை 30
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு பொதுக்குழு கூட்டம் இன்று சனிக்கிழமை காலை வேதாரணியம் மேலத்தெரு பாரதிய வித்யாலயா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. வேதாரண்யம் வட்ட நுகர்வோர் பாதுகாப்புக்குழு இணைசெயலாளர் G. சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றவும்,
வேதாரண்யம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு தலைவர் V. வீர சுந்தரம் தலைமை உரையாற்றவும் ,வேதாரண்யம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு துணைத் தலைவர் ஆர். வி. சுவாமிநாதன்,என். கந்தசாமி முன்னிலை வகிக்கவும்
வேதாரணியம் வட்ட நுகர்வோர் பாதுகாப்பு குழு செயலாளர் தேசிய நல்லாசிரியர் S. செல்வராஜ் 2021-2022 ஆண்டறிக்கை வாசிக்கவும்
சங்கப் பொருளாளர் V.மாரிமுத்து 2021 22 ஆம் ஆண்டு வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்.சங்கத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியில்
உறுப்பினர்களின் கருத்துரை
கேட்கப்பட்டது.வந்திருந்த பெரும்பாலன உறுப்பினர்கள் வேதாரணியம் சேது ரஸ்தாவில் இயங்கிவரும் இந்தியன் வங்கியில் அலுவலர்களின் செயல்பாடுகள் திருப்தியாக இல்லை எனவும் வாடிக்கையாளர் எண்ணிக்கை ஏற்ப பணியாளர்கள் இல்லை. வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் பணிகளை செய்து முடிப்பது பெரும் சவாலாக உள்ளது.
வாடிக்கையாளர்கள்
பெரும்பாலும் அலைக்கழிக்கப்படுகிறார்கள்.குறிப்பிட்ட நாளில் அல்லது குறிப்பிட்ட நேரத்தில் வங்கி பணிகளை முடிப்பது இல்லை .
வாடிக்கையாளர்களுக்கும் வங்கி அலுவலர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதங்கள் நிகழ்கிறது.
வங்கி அலுவலர்கள் வாடிக்கையாளர்களை சுத்தமாக மதிப்பதில்லை எனவும் மொத்தத்தில் இவ்வங்கி யில் சேவையில் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அதிருப்தி நிலையில் உள்ளனர்.
இதற்குத் தேவையான தகுந்த நடவடிக்கை எடுக்க ஆவன செய்யும்படியும் கலந்துகொண்ட அதிக உறுப்பினர்கள் தகுந்த ஆதாரங்களுடன் கோரிக்கை வைத்தனர்.இந்த பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் இத்தீர்மானம் முக்கியமாக கருதப்படுகிறது.
இறுதியில் சங்க அமைப்பாளர் தேசிய நல்லாசிரியர் வி வைரக்கண்ணு நன்றி உரையாற்றினார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

