விபத்தில் உயிரிழந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குடும்பத்திற்கு ரூபாய் 30 லட்சத்திற்கான காசோலை வழங்கினார் மத்திய மண்டல ஐ.ஜி ஜெயராம். இன்று புதன்கிழமை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் அலுவலகத்தில் ஐ.ஜி ஜெயராம் முன்னிலையில் பாரத ஸ்டேட் வங்கி திருச்சி மண்டல மேலாளர் சபீரா பர்வீன் மற்றும் முதன்மை மேலாளர் விஜயகுமார் முன்னிலையில் திருச்சி காமராஜபுரம் பாரத ஸ்டேட் வங்கி மேலாளர் வேல்விழி மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் பாரி மன்னன் ஆகியோர் இணைந்து திருச்சி மாவட்டம் பெல் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ஜெயக்குமார் அவர்கள் கடந்த நவம்பர் மாதம் 2019 அன்று சாலை விபத்தில் இயற்கை எய்தினார்,
இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் உள்ளதால் அவருடைய குடும்பத்திற்கு நிவாரணம் பெற்றுத் தர காவல்துறை தலைவர் அவர்களின் சீரிய முயற்சியால் திருச்சி காமராஜபுரம் பாரத ஸ்டேட் வங்கி கிளையின் மூலம் காவலர்களுக்கான வங்கி கணக்கில் வழங்கப்படும் 30 லட்சத்திற்கான காப்பீட்டுத் தொகையை பெற்று விபத்தில் இறந்த உதவி ஆய்வாளரின் குடும்பத்தாரிடம் வழங்கினார். மேலும் திருச்சி மத்திய மண்டலத்தில் உள்ள அனைத்து காவலர்களும், காவல் அதிகாரிகளும் தங்கள் வங்கிக் கணக்கை பாரத ஸ்டேட் வங்கியில் காவலர்களுக்கான வங்கி கணக்கு திட்டத்தில் உள்ளதா! என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும் அவ்வாறு இல்லையெனில் மேற்கண்ட காவலர்களுக்கான வங்கி கணக்கு திட்டத்தில் தங்கள் வங்கிக் கணக்கை மாற்றிக்கொள்ள அறிவுரை வழங்கினார்..

