வேதாரண்யத்தில் சிட்டி யூனியன் பேங்க் சார்பில் ஏடிஎம் மையங்கள் திறப்பு விழா
வேதாரணியம் ஜூலை 29
நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் நகரப்பகுதியில் சிட்டி யூனியன் பேங்க் சார்பில் புதிதாக 4 இடங்களில் ஏடிஎம் சேவை மையங்கள் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. வட்டாட்சியர் அலுவலக பேருந்து பயணிகள் நிழலகம்,ஏரிக்கரை பேருந்து பயணிகள் நிழலகம் பூ பெட்டி உள்ளிட்ட நான்கு இடங்களில்
இந்த வங்கி சார்பில் பேருந்து பயணிகள் நிழலகத்துடன் இணைந்த ஏடிஎம் மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.


இந்த ஏடிஎம் மையங்களில் திறப்பு நிகழ்ச்சிகளில் வங்கியின் துணை பொது மேலாளர் வெங்கடேஸ்வரன் மண்டல வளர்ச்சி மேலாளர் சதீஷ்குமார் கிளை மேலாளர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர் .ஏரிக்கரை பேருந்து பயணிகள் நிழலகத்துடன் கூடிய ஏடிஎம் சேவை மையத்தை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.வி. ராஜேந்திரன் திறந்து வைத்தார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

