• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டம் மங்களக்குறிச்சி ஊராட்சி, மற்றும் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் நேரில் ஆய்வு

policeseithitv by policeseithitv
July 28, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடி மாவட்டம் மங்களக்குறிச்சி ஊராட்சி, மற்றும் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் நேரில் ஆய்வு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டம் மங்களக்குறிச்சி ஊராட்சி, மற்றும் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி,

ஜூலை, 29

தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு குடிநீர் வாரியம், மூலம் மங்களக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வரும் 43 45 கூட்டுக் குடிநீர் திட்டத்தை கலெக்டர் செந்தில்ராஜ், சண்முகையா எம்.எல்.ஏ ஆகியோர் மங்கள குறிச்சி நீரேற்று நிலையம் மற்றம் தாமிரபரணி ஆற்றுப்படுகை குரங்கணிக்கு அருகில் அமைந்துள்ள ஏழு எண்ணிக்கையிலான நீர்உறிஞ்சும் கிணற்றினை ஆய்வு செய்தனர்.

இத்திட்டம் ஸ்ரீவைகுண்டம் ஒன்றித்தில் குரங்கணி அருகில் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஏழு எண்ணிக்கை கொண்ட நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கப்பட்டு

5 ஹெச்பி மோட்டார் மூலம் நீரேற்று நிலையம் மங்களக் குறிச்சியில் 2 லட்சம் கொள்ளளவு கொண்டுள்ள தரைமட்ட தொட்டியில் நீர் சேகரிக்கப்படுகிறது. பின்னர் 30 ஹெச்பி மோட்டார் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு பிராதான குழாய் மூலம் 37.50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாப்பிளையூரணி ஊராட்சியில் உள்ள 1 லட்சம் லிட்டர் மற்றும் 2.25 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரைமட்டத் தொட்டியில் சேகரிக்கப்படுகிறது. மாப்பிளையூரணி ஊராட்சியில் 36 எண்ணிக்கை மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியில் (12 இலட்சம் லிட்டர்) மோட்டார் மூலம் இயக்கப்பட்டு பகிர்மான குழாய் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது.

பின்னர் மாப்பிளையூரணி ஊராட்சிக்கு தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய நிதியின் மூலம் கோரம்பள்ளம் குளத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர் உறிஞ்சும் கிணற்றினை ஆய்வுசெய்தார். மாப்பிளையூரணி ஊராட்சிக்கு குடிநீர் தேவைக்காக போதுமான நிதியினை அரசிடமிருந்து பெற்று குடிநீர் பிரச்சினைகளை போக்க வழிவகை செய்யப்படும் என்று மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

ஆய்வின் போது தமிழ்நாடு குடிநீர் வாரிய நிர்வாகப் பொறியாளர் செந்தூர்பாண்டி, மாப்பிளையூரணி ஊராட்சி மன்றத் தலைவர் சரவணக்குமார், உதவி நிர்வாகப் பொறியாளர் ராஜா, உதவிப் பொறியாளர் மகேஷ்குமார், ஊராட்சி துறை உதவி இயக்குநர் உலகநாதன், தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமராஜ், ஊராட்சி நாகராஜ், ஒன்றிய கவுன்சிலர் தொம்மை சேவியர், மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Previous Post

நாகை அடுத்த திருமருகலில் டிரோன் மூலம் நானோ யூரியா மற்றும் மருந்து தெளித்தல் செயல் விளக்கம்

Next Post

வேதாரண்யத்தில் சதுரங்க விளையாட்டு போட்டி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.

Next Post
வேதாரண்யத்தில் சதுரங்க விளையாட்டு போட்டி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.

வேதாரண்யத்தில் சதுரங்க விளையாட்டு போட்டி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In