நாகை அடுத்த திருமருகலில் டிரோன் மூலம் நானோ யூரியா மற்றும் மருந்து தெளித்தல் செயல் விளக்கம்
நாகை ஜூலை 28
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் மேலபூதனூர் ஊராட்சியில் குறுவை நெல் பயிறில் ட்ரோன் மூலம் நானோயூரியா மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்து தெளித்தல் செயல் விளக்கம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் முன்னிலையில் நடந்தது.
பின்பு மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
மேலபூதனூர் கிராமத்தில் இராமகிருஷ்ணன் என்ற முன்னோடி விவசாயி அவரின் நிலத்தில் குறுவை சாகுபடி செய்து அவற்றிற்கு ட்ரோன் மூலமாக நானோயூரியா என்ற உரத்தை தெளித்துள்ளார்கள். நானோ யூரியா பயன்படுத்துவதன் மூலம் 1 ஏக்கருக்கு சுமார் 45 கிலோ பயன்படும் இடத்தில் 500கிராம் நானோயூரியாவை எளிதில் ஏக்கர் முழுவதும் தெளித்துவிடலாம்.
ட்ரோன் மூலம் நானோயூரியா மற்றும் பயிர் பாதுகாப்பு மருந்து தெளிப்பதால் குறைவான நேரத்தில் அதிக பரப்பினை தெளிக்க முடியும். தற்சமயம் ஆள் பற்றாக்குறையை போக்கட்ரோன் முறை பயன்படுத்தலாம். ஒரு ஏக்கர் பரப்பினை 5 நிமிடத்தில் தெளிக்க முடியும். புதிய தொழில்நுட்பமான நானோயூரியா பயன்படுத்தும் முறையினால் சராசரியாக 8 சதவீதம் கூடுதல் மகசூல் கிடைக்கும். நானோயூரியா வயல் வெளிக்கும் எடுத்து செல்வது எளிது. நானோயூரியா பயன்படுத்தும் முறை குறித்து அனைத்து வட்டாரங்களிலும் விழிப்புணர்வு செயல் விளக்கங்கள் மேற்கொள்ள விவசாயிகள் முன்வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்முறை விளக்கத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குநர் ஜாக்குலாஅகண்டராவ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். செல்வகுமார் அரசு அலுவலர்கள் உட்பட விவசாயிகள் கலந்துகொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டா் எல்விஸ் லாய்மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்

