செஸ் ஒலிம்பியாட் தொடர்பான போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் – மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் வழங்கினார்
நாகை ஜூலை 27
நாகப்பட்டினம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிம்பியாட் தீப விழாவில் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் செஸ் ஒலிம்பியாட் தொடர்பான பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கும் விழா தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன், தாட்கோ கழகத் தலைவர் மதிவாணன் கீழ்வேளுர் எம்.எல்.ஏ நாகை மாலி ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் எதிர்வரும் 28.07.2022 முதல் 10.08.2022 வரை தமிழகத்தில் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. மேற்படி போட்டியில் 188 நாடுகளை சார்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொள்ள உள்ளனர். அதனையொட்டி மதுரையில் மாவட்டத்தில் இருந்து நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட செஸ் ஒலிம்பியாட் ஜோதியை வேதாரண்யம் உப்புசத்தியாகிரக ஸ்தூபியிலிருந்து மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, செஸ் ஒலிம்பியாட் ஜோதி மாவட்ட விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஜோதியினை பெற்றுக்கொண்டு வேதாரணீஸ்வரர்ஆலயம் வழியாக வேதாரண்யம் பேருந்து நிலையம், தோப்புத்துறை, செம்போடை, தலைஞாயிறு, திருக்குவளை, மேலப்பிடாகை, திருப்பூண்டி, வேளாங்கண்ணி சர்ச், புத்தூர் அண்ணாசிலை, கோட்டைவாசல், நாகப்பட்டினம் பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், நாகூர் தர்கா சென்று மாவட்ட ஆட்சியர் வளாகம் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு மாலை 4.30 மணியளவில் வந்தடைந்தனர்.



44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளையொட்டி நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கிடையே செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு தொடர்பாக ஓவிய, பேச்சு, கட்டுரை, நடனம் போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கௌதமன், தாட்கோ கழகத் தலைவர் மதிவாணன், கீழ்வேளுர் எம்.எல்.ஏ நாகை மாலி ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர், மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகா, மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, நாகப்பட்டினம் வருவாய் கோட்டாச்சியர் முருகேசன், நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டா் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்

