வேதாரண்யம் அருகே கத்திரிப்புலத்தில் தனியார்
மினி பேருந்து கவிழ்ந்து விபத்து
வேதாரண்யம் ஜூலை 27
நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த
கத்திரிப்புலம் வியாழன் சந்தை அருகில் சாலையில் அரசு பேருந்து ஒன்று நின்று கொண்டிருந்த
போது அந்த வழியே வேகமாக வந்த தனியார் மினி பேருந்து அரசு பேருந்து மீது மோதாமல் இருக்க நிறுத்த முயன்ற போது கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில் பயணம் செய்த வேதாரணியம் பாரதிதாசனார்
கல்லூரி மாணவ மாணவிகள் 15 பேர் காயம் அடைந்து வேதாரணியம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மேலும்
அனுசியா என்ற கல்லூரி மாணவி பேருந்தின் அடியில் சிக்கி காலில் பலத்த காயம் அடைந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

