தூத்துக்குடி தென்பாகம் காவல் ஆய்வாளர் ராஜாராம் மகள் ஷீஜா
குரூப் 1 தேர்வில்
மாநிலத்தில்
9 வது இடம் பிடித்து சாதனை :
எஸ்.பி பாலாஜி சரவணன் பாராட்டு!
தூத்துக்குடி,
ஜூலை,27
குரூப் 1 தேர்வில் மாநிலத்தில் 9வது இடம் பெற்ற தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் மகளுக்கு எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய 2021 – 2022ம் ஆண்டிற்கான குரூப் – 1 தேர்வில் தூத்துக்குடி தென்பாக காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் என்பவரது மகள் ஷீஜா மாநிலத்தில் 9வது இடம் பிடித்து வெற்றி பெற்றுள்ளார். அவர் வெள்ளிச்சந்தை அருணாச்சலம் மகளிர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பு முடித்து, தனது 24 வது வயதில் குரூப் -1 தேர்வில் வெற்றி பெற்று, விரைவில் துணை ஆட்சியராக பதவியேற்க உள்ளார்.
இவரது தந்தை ராஜாராம் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகில் உள்ள குஞ்சன்விளை ஊரைச் சேர்ந்தவர் என்பதும், இவர் 1997ம் ஆண்டு உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்து காவல் ஆய்வாளராக பதவி உயர்வு பெற்று தற்போது தென்பாகம் காவல் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வில் வெற்றிபெற்ற ஷீஜாவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சால்வை அணிவித்து புத்தகம் பரிசாக வழங்கி பாராட்டினார். அப்போது காவல் ஆய்வாளரான அவரது தந்தை ராஜாராம் உடனிருந்தார்.
செய்தி தொகுப்பு
எம். ஆத்திமுத்து.
போலீஸ் செய்தி

