நாகையில் மக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம்
நாகை ஜூலை 26
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தலைமையில் நடந்தது.
வாராந்திரமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித் தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 184 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.



மேலும் கூட்டத்தில் நான்கு திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாவினையும், ஓரு திருநங்கைக்கு குடும்ப அட்டையினையும், நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இரண்டு மாற்று திறனாளிக்கு மாதந்திர உதவித் தொகையானரூ.1000க்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்திய குழந்தைகள் நலச்சங்கத்தின் மூலம் தேசிய அளவில் பள்ளி மாணவர்களைக் கொண்டு நாகப்பட்டினம் மாவட்டஅளவிலான வர்ணம் தீட்டுதல் போட்டிகளில் வெற்றி பெற்ற 5 மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் ராஜன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உட்பட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி சேகரிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்

