தூத்துக்குடியில் அசன விருந்தை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.

தூத்துக்குடி புனித சந்தியாகப்பர் ஆலய 30ம் ஆண்டு திருவிழா கடற்கரை சாலையில் உள்ள ஆலயத்தில் கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் அசன விருந்தை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் அசனவிருந்தை துவக்கி வைத்தனர்.
விழாவில் மாவட்ட திமுக அவைத்தலைவர் செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர திமுக மீனவரணி துணை அமைப்பாளர் ஆர்தர்மச்சாது, திமுக வட்டச்செயலாளர் வன்னிராஜ், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர், வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் கருணா, மணி, ஜோஸ்பர், பரதர் நல சங்க செயலாளர் அந்தோணிசாமி, பொருளாளர் காஸ்ட்ரோ, முன்னாள் கவுன்சிலர் சர்மிளா அருள்தாஸ், உள்பட ஆலய நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு
எம். ஆத்தி முத்து
போலீஸ் செய்தி

