• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தென்காசி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனைமர விதை நடவுப்பணியை  தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.ஏ.தாமோதரன் துவக்கி வைத்தார்.

policeseithitv by policeseithitv
July 26, 2022
in 24/7 ‎செய்திகள், அரசியல், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தென்காசி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனைமர விதை நடவுப்பணியை  தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.ஏ.தாமோதரன் துவக்கி வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தென்காசி மாவட்டத்தில் ஒரு லட்சம் பனைமர விதை நடவுப்பணியை  தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.ஏ.தாமோதரன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் தென்காசி மாவட்டத்தில் இந்த ஆண்டு ஒரு லட்சம் பனைமர விதை விதைக்கும் திட்டம் துவக்க விழா சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சியில் வைத்து நடைபெற்றது. சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி மன்றத்தலைவர் காளியம்மாள் செல்வகுரார்  தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் பண்டாரம் , தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு  கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் தூத்துக்குடி எஸ்.தனலெட்சுமி , பொருளாளர் திருநெல்வேலி எஸ்.நவீனா செல்வகுமாரி , கூட்டமைப்பின் சட்ட ஆலோசகரும் தென்காசி ஐ.சி.ஆர்.பி.யு அமைப்பின் தலைவருமான  இராமசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு பொதுச்செயலாளர்  திருவண்ணாமலை தமிழ்செல்வி அனைவரையும் வரவேற்றார். இவ்விழாவில் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் எம்.ஏ. தாமோதரன் கலந்து கொண்டு ஒரு லட்சம் பனைமர விதை நடவுப்பணியை துவக்கி வைத்தார்.  தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில இணைச்செயலாளர்  கிருஷணகிரி இராஜசேகர் , துணைத்தலைவர் திருப்பத்தூர் உத்திரகுமார் , தமிழ்நாடு தொண்டு நிறுவனங்கள் கூட்டமைப்பு  அமைப்பு செயலாளர்கள் திருநெல்வேலி முத்துமாரி , தங்கஇசக்கியம்மாள் , செல்வி மற்றும் தென்காசி  ஐ.சி.ஆர்.பி.யூ அமைப்பு மாநில நிர்வாகிகளான எஸ்.பாலசண்மும் , எஸ்.முத்துக்குமாரசாமி , எம்.சண்முகம் , ஆர்.பாலையா , ஆர்.சிபி சக்கரவர்த்தி , எஸ்.முருகையா , எம்.கணேசன் , ராஜா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அதன் பிறகு செயதியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு மாநில தலைவர் எம்.ஏ.தாமோதரன் , தமிழர்களின் பாரம்பரியமான தேசிய மரம் பனைமரமாகும். பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பனங்கற்கண்டு , பனைவெல்லம் , கருப்பட்டி , நுங்கு ,  பதநீர் , பனங்கிழங்கு , பனங்கிழங்கு மாவு போன்ற உடலுக்கு ஆரோக்கியமான பனை உணவு பொருட்களை உணவாக உண்டு பண்டைய தமிழர்கள் நீண்ட ஆயுளோடு வாழ்ந்து வந்தனர். கட்பகவிருட்சமான பனைமரங்களை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். கிராமச்சாலை ஓரங்கள் , பள்ளி வளாகங்கள் , விளைநிலங்களின் வரப்பு ஓரங்கள் , மயானப்பாதைகள் , குளக்கரைகள் போன்ற இடங்களில் பனைவிதைகளை நடவு செய்து பராமரிக்கலாம். பள்ளி கல்லூரி மாணவர்கள் , விவசாயிகள் , மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் ஆகியோருக்கு பனைமரங்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தவும்  திட்டமிட்டுள்ளோம். இந்த ஆண்டு  தென்காசி மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சம் பனைவிதைகளை நடவு செய்ய தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது. என்று பேசினார். நிறைவாக தூத்துக்குடி பேரிடர் மேலாண்மை அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் தா.முருகேஸ்வரி நன்றி கூறினார். பின்னர்  தென்காசி வட்டாரத்தில் உள்ள பாட்டாகுறிச்சி ஊராட்சியில் பனைவிதை நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.                                              செய்தி தொகுப்பு

எம். ஆத்தி முத்து
போலீஸ் செய்தி
Previous Post

தூத்துக்குடி மாவட்ட பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான முதற்கட்ட பணியிடைப்பயிற்சி – ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடந்தது! 50 க்கு மேற்பட்ட  பள்ளி ஆசிரியர்கள், மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Next Post

தூத்துக்குடி புனித சந்தியாகப்பர் ஆலய 30ம் ஆண்டு திருவிழா அசன விருந்தை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.

Next Post
தூத்துக்குடி புனித சந்தியாகப்பர் ஆலய 30ம் ஆண்டு திருவிழா அசன விருந்தை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.

தூத்துக்குடி புனித சந்தியாகப்பர் ஆலய 30ம் ஆண்டு திருவிழா அசன விருந்தை அமைச்சர் கீதாஜீவன் மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைத்தனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In