• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ் 4½ ஆண்டுகள் கொள்ளையடித்தார் என்ற பேச்சால் கூட்டத்தில் பரபரப்பு

policeseithitv by policeseithitv
July 25, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ்  4½ ஆண்டுகள் கொள்ளையடித்தார் என்ற பேச்சால் கூட்டத்தில் பரபரப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி. ஜுலை 25.
திமுக ஆட்சியில் சொத்து வரி உயர்வு, மின்கட்டணம் உயர்வு, விலைவாசி உயர்வு போன்றவற்றை உயர்த்திய திமுக அரசை கண்டித்து தூத்துக்குடி சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் பகுதியில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் அதிமுக மாநில அமைப்புச் செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் பேசுகையில்: மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கிற புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோர்களது வழியில் கழகத்தை கட்டிக் காத்து வரும் எடப்பாடியார் தலைமையில் உள்ள அதிமுக தலைமையின் கீழ் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்டுள்ள உங்களை வரவேற்கிறேன். அம்மா ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த மடிக்கணினி, சைக்கிள், திருமண உதவித்திட்டம், புத்தகம், பேக் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை விடியா அரசின் ஆட்சியில் ஸ்டாலின் நிறுத்தியுள்ளார். மிகவும் கண்டிக்கத்தக்கது.
எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில் செய்த சாதனைகள் ஏராளம். தூத்துக்குடியில் நடைபெறுகிற ஸ்மார்ட் சிட்டி திட்டம் அனைத்தும் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. அதே போல் திருச்செந்தூர் முதல் தென்காசி வரை போடப்பட்டுள்ள சாலை அதிமுக ஆட்சியில் போடப்பட்டன. இதே போல் பல திட்டங்களை தொடர்ந்து கொடுத்த அம்மாவின் வழி வந்த எடப்பாடியாரின் திட்டத்தை நிறுத்திய திமுக அரசை கண்டிப்பது மட்டுமின்றி தெருமுனை பிரச்சாரங்கள் மேற்கொள்ள வேண்டும். மக்கள் நலனை கருத்தில் கொள்ளாமல், குடும்ப நலனை மட்டும் கருத்தில் கொண்டு 80 கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் பேனா வடிவில் கடலில் நினைவு சின்னம் அமைப்பது தேவையற்றது. திமுக ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்த வேண்டும் என்றார்.


மாவட்ட செயலாளர் சண்முகநாதன் பேசுகையில்: 100 யூனிட் வரை இலவச மின்சாரத்தை அனைவரும் அனுபவித்து வந்தோம். அதற்கு மேல் வரும் அளவிற்கு தான் பணம் கட்டினோம். ஆனால் தற்போது மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டுத் தீர்வை 100 சதவீதம் அதிகபடியாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிலும் மாநகராட்சி பகுதியென்றால் 150 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதே போல் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கை முடக்கியுள்ளனர்.
எம்-சாண்ட் மணல், ஜல்லி உள்ளிட்டவைகள் மூலம் தினமும் ஸ்டாலின் குடும்பத்திற்கு 500 கோடி முதல் 1000 கோடி வரை செல்கிறது. நமது மாவட்டத்திலும் மணல் விற்பனை அனுமதி வழங்கியுள்ளனர். கட்டுமான பொருட்கள் மட்டுமின்றி அனைத்துமே விலை உயர்ந்துள்ளன. ஏழை-எளிய மக்கள் வாழ முடியாத நிலை உள்ளது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத ஸ்டாலின் அரசை கண்டிக்கிறோம். எங்களை வீழ்த்துவதற்கு மற்றுமொரு கட்சியும் தமிழகத்தில் போராட்டங்கள் நடத்துகின்றன. எம்ஜிஆர் மூன்று முறை தொடர்ந்து முதலமைச்சராக இருந்தார். அவர் மறைந்த பிறகு ஏற்பட்ட பிளவின் காரணமாக திமுக ஆட்சிக்கு வந்தது. பிரிந்த இயக்கத்தை ஒன்றுபடுத்தி அம்மா அவர்கள் இரட்டை இலை சின்னத்தைப் பெற்று தொடர்ந்து முதலமைச்சராக பணியாற்றினார்கள். அவரது மறைவிற்கு பின்பு ஏற்பட்ட சில காரணங்களால் எடப்பாடியாருக்கு எதிராக 18 எம்எல்ஏ-க்கள் தினகரன் பின்னால் சென்றனர். அப்போது நான் உட்பட 11 எம்எல்ஏக்கள் ஓ.பி.எஸ். தலைமையில் எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு அணியாக செல்பட்டோம். ஆனால் எடப்பாடியை எதிர்த்து அல்ல. சசிகலாவை எதிர்த்து சென்றோம். ஆனால் இதை தத்துருவமாக எதிர்கொண்டு எடப்பாடியார் 18 எம்எல்ஏ-க்களில் பதவியை காலி செய்தார். ஆனால் எங்களை அப்படி செய்யவில்லை. மனிதநேயத்தோடு மன்னித்து ஏற்றுக் கொண்டார். இல்லையென்றால், நான் அரசியலில் அனாதையாகி இருப்பேன். ஓபிஎஸ் உள்பட.
அதன்பின் 4½ ஆண்டு காலம் துணை முதலமைச்சராக இருந்த ஒபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடியார் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து பணியாற்றிய நிலையில் பொதுக்குழு கூட்டத்திற்கு முறையாக இருவரும் கையெழுத்திட்ட கடிதம் வழங்கப்பட்டு, கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு தடை கேட்டு நீதிமன்றம் சென்றவர் ஓபிஎஸ். பின்னர் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திற்கு அவருக்கு முறையாக அழைப்பு விடுக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகிய பின்னர் பொருளாளர் என்ற முறையில் கலந்து கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர் நமது கோவிலாக விளங்க கூடிய எம்ஜிஆர் மாளிகைக்கு சென்று பூட்டை உடைத்து, கதவை எட்டி உதைத்து, உள்ளே இருந்த ஆவணங்கள் அனைத்தையும் திருடிவிட்டு சென்ற திருடன் ஓபிஎஸ்-ஸை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு இடைக்கால பொதுச்செயலாளராக எல்லோராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடியார் தலைமையில் ஒற்றை தலைமை ஏற்பட்ட பிறகு கட்சி எழுச்சி பெற்றுள்ளது.
தன்னிச்சையாக முடிவெடுத்து சந்திக்கும் முதல் ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டுள்ளனர். ஓபிஎஸ் பக்கம் ஒரு சதவீதம் கூட ஆளிலில்லை. ஆனால், அவர் என்னை கட்சியில் இருந்து நீக்கிவிட்டதாக அறிக்கை விடுகிறார். எவ்வளவு பெரிய கேலி கூத்து பாருங்கள். அதிமுக ஆட்சியில் 4½ ஆண்டு காலம் நன்றாக கொள்ளையடித்து விட்டு சென்ற அவர் சட்டமன்றத்தில் முன்னாள் முதலமைச்சரை புகழ்வதும், ஸ்டாலினை அவரது மகன் சந்திப்பதும் ஏற்றுக்கொள்ள முடியுமா. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் திமுக என்ற தீய சக்தியை எதிர்த்து அரசியல் செய்தார்கள். அவரது வழியில் எடப்பாடி திமுகவை எதிர்த்து பணியாற்றுகிறார்.

தூத்துக்குடியில் அதிமுக சார்பில் விலைவாசி உயர்வை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஓ.பி.எஸ் 4 1/2 ஆண்டுகள் கொள்ளையடித்தார் என்ற பேச்சால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உட்கட்சி பூசலை வெளியுலகத்திற்கு ஊழல் மூலம் ஓபிஎஸ்-ஸை விமர்சனம் செய்தது. பலருடைய முகம் சுளிக்கும் வண்ணம் இருந்தது. ஆர்ப்பாட்டத்தில் பகுதி செயலாளர்கள், முருகன், சேவியர், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், வடக்கு மாவட்ட ஜெ.பேரவை துணை செயலாளர் ஜீவாபாண்டியன், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் ஆண்ட்ரூ மணி, பிள்ளை விநாயகம், ராஜாராம், தலைமை கழக பேச்சாளர் கருணாநிதி, முன்னாள் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் சி.த.சு.ஞான்ராஜ், முன்னாள் கவுன்சிலர் ஜெயக்குமார், சகாயராஜ், வட்ட செயலாளர்கள் முருகன், அருண்குமார், ராஜா மற்றும் நிர்வாகிகள் பி அண்ட் டி காலனி முருகேசன், டெரன்ஸ், மூர்த்தி, சங்கர், ஹென்றி, சின்னதுரை, யு.எஸ்.சேகர், திருமணி, ஞானபுஷ்பம், ஆறுமுகநேரி அரசகுரு, சேவியர் ராஜ், மேலூர் கூட்டுறவு வங்கி துணை தலைவர் சுப்பிரமணியன், இயக்குநர்கள் பாலசுப்பிரமணியன், அன்புலிங்கம், திருமணி, டைமண்ட் ராஜ், கருப்பசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

 

Previous Post

வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய ரப்பர் படகில் வந்த போலந்த நாட்டைச் சேர்ந்தவர் கைது.

Next Post

தூத்துக்குடி மாவட்ட பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான முதற்கட்ட பணியிடைப்பயிற்சி – ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடந்தது! 50 க்கு மேற்பட்ட  பள்ளி ஆசிரியர்கள், மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

Next Post

தூத்துக்குடி மாவட்ட பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான முதற்கட்ட பணியிடைப்பயிற்சி - ஏ.பி.சி. மகாலட்சுமி மகளிர் கல்லூரியில் நடந்தது! 50 க்கு மேற்பட்ட  பள்ளி ஆசிரியர்கள், மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In