கோவையில் நடைபெற்று வரும் புத்தகத்
திருவிழாவில் : ஆட்சியர் டாக்டர் சமீரன் எழுதிய
2 புத்தகங்கள் வெளியிடப்பட்டது.
கோவை, ஜூலை, 25
கோவை புத்தக திருவிழா 5 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக புத்தக திருவிழா நடைபெறுவதில் சிரமம் இருந்தது.
மாவட்ட நிர்வாகம், கொடிசியா மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து கோவையில் புத்தக திருவிழாவை நடத்துகின்றன.
கோவை மாவட்ட நிர்வாகம், கொடிசியா மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து கோவையில் கடந்த 22ம் தேதி முதல் வருகிற 31ம் தேதி வரை கொடிசியா அரங்கில் புத்தக திருவிழாவை நடத்துகின்றன. காலை 10 மணி முதல் 8 மணி வரை பார்வையாளர்களுக்கு அனுமதி
வழங்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் சமீரன், ‘கோவை புத்தக திருவிழா 5 ஆண்டுகள் நடைபெற்ற நிலையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக புத்தக திருவிழா நடைபெறுவதில் சிரமம் இருந்தது. இந்தாண்டு புத்துணர்ச்சியுடன் 6வது ஆண்டாக புத்தக திருவிழா நடைபெறும். 10 நாள் நடைபெறும் விழாவில் 300க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் பங்கேற்கின்றனர். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இந்த நிலையில் நேற்று 24/07/22 புத்தகத் திருவிழா நிகழ்ச்சியின் போது கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன் எழுதிய பத்மராஜன் கந்தர்வனோ,
மானிடனோ, மற்றும் முதுகுளம் ராகவன் பிள்ளை நூல்களை ஞான ராஜசேகரன் இஆப (ஓய்வு) வெளியிட இலக்கிய கூடல் தலைவர் பாலசுந்தரம் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி தொகுப்பு:
கோவை ரகுநாதன்

