வேதாரணியத்தில் வரும் ஆடி அமாவாசையை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் பற்றி ஆராய வேதாரண்யம் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம்
வேதாரணியம் ஜூலை23
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வரும் ஆடி அமாவாசை அன்று கடலில் குளிக்க வரும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை கூட்டம்
வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதா கலந்துகொண்டார். இந்த ஆலோசனை கூட்டத்தில் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயில் செயல் அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டார மருத்துவ அலுவலர், தீயணைப்பு அலுவலர், தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர், உணவு பாதுகாப்பு அலுவலர், காவல் ஆய்வாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலர், மற்றும் வர்த்தக சங்கம், வணிகர் சங்கம், அரிமா சங்கம், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் கூறும்போது ஆடி அமாவாசைக்கு வரும் பக்தர்களுக்கு தக்க பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

