நாகப்பட்டினம் நகராட்சி வேளாங்கண்ணி பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில்
விழிப்புணர்வு முகாம்.
நாகப்பட்டினம் ஜூலை 23
நாகப்பட்டினம் நகராட்சி வேளாங்கண்ணி பேரூராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சார்பில் புதிய நம்பியார் நகர் வேளாங்கண்ணி பாதாள சாக்கடை திட்ட நிலைய வளாகத்தில் தன்னார்வ அமைப்புகள் குடியிருப்போர் நலச் சங்கங்கள் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன் தீவிர தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாமை
மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் இன்று தொடங்கி வைத்து
தூய்மை பணியாளர்கள் செவிலியர் கல்லூரி மாணவிகளுடன் தூய்மை பணி குறித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.


சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மரக்கன்றுகளை நட்டார்.
இந்நிகழ்ச்சியில் நாகப்பட்டினம் நகர மன்ற தலைவர் மாரிமுத்து,
வேளாங்கண்ணி பேரூராட்சி தலைவர் A. டயானா சார்லஸ் ,
நகராட்சி ஆணையர் என். ஸ்ரீதேவி ,நகராட்சி பொறியாளர் எம் ஜெயகிருஷ்ணன், பேரூராட்சி செயல் அலுவலர் எம் பொன்னுசாமி மற்றும் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தித் தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

