கோவையில் உள்ள கோவை புதூர் மைதானத்தில் முதன்முறையாக சைக்கிள் போலோ போட்டிகள் நடைபெற்றன.
இந்த நிகழ்ச்சி வரும் 24ஆம் தேதி மாலை நிறைவு பெறுகின்றது. இதனை நாராயண குரு கல்லூரி செயலாளர்,மற்றும் கல்லூரி முதல்வர் தொடக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் தமிழக சைக்கிள் போலோ அசோசியேசனின் தலைவர் அருண், மற்றும் மகேந்திர பிரபு, செகரட்டரி சேகர், உள்ளிட்டோர் சிறப்பாக ஏற்பாடுகளை செய்து நடத்தி வருகின்றார்கள். சைக்கிள் போலோ பெடரேஷன் ஆப் இந்தியாவின் பிரசிடெண்ட் ஏர் மார்ஷல் பாப்பட் கலந்து கொண்டு தலைமை தாங்கினார்.

மேலும் சைக்கிள் போலோ ஃபெடரேஷன் ஆப் இந்தியாவின், பல்வேறு உறுப்பினர்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.இந்தப் போட்டியில் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், கேரளா,கர்நாடகம் ,தமிழகம், உள்ளிட்ட மாநிலங்கள், கலந்து கொண்டன. மேலும் இந்திய விமானப்படை, கப்பல் படையைச் சேர்ந்த வீரர்களும் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி வருகின்றார்கள்.
கோவை நிருபர் கே ரகுநாதன் ????

