தூத்துக்குடியில் 15 ஆண்டுகளாக பத்திரிக்கையாளர்களின் நீண்டநாள் கோரிக்கையான மானிய விலையில் வீட்டு மனை பட்டா ஒதுக்காமல் பத்திரிகையாளர்களின் கோரிக்கையை செவிசாய்க்காமல் கிடப்பில் போட்டுள்ளநிலையில் தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் செயற்குழு கூட்டம் கூட்டி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் வைத்து ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்தது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகம் அயர்த்தமாகி இருந்து வந்த நிலையில் தூத்துக்குடி பிரஸ் கிளப் நிர்வாகத்தின் நியாயமான கோரிக்கைக்கு பல்வேறு பத்திரிகையாளர்கள் அமைப்பு மற்றும் பல்வேறு பொது அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக பத்திரிகை அமைப்புகளின் மாநில சங்கமாக விளங்கும் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கம் தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் நீண்டநாள் கோரிக்கையான மானிய விலையில் வீட்டு மனை பட்டா வழங்குவதை மேலும் காலதாமதம் படுத்தாமல் விரைவில் வழங்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளது .
இந்நிலையில் நேற்று மதியம் 2 மணியளவில் ‘தூத்துக்குடி பிரஸ் கிளப்’ மன்ற நிர்வாகிகளை நேரில் அழைத்து பத்திரிகையாளர்களின் கோரிக்கையை கவனமுடன் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் , முந்தய மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டலின் படி பத்திரிகையாளர்களுக்கு அடையாளம் காட்டப்பட்ட இடத்திற்கு தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பொது பாதைக்கான நிலத்தை தனியாரிடம் இருந்து வாங்கி, தமிழக ஆளுநர் பெயரில் பத்திரம் பதிவும் செய்து, முந்தைய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் 2019 டிசம்பரிலேயே கொடுக்கப்பட்ட விபரங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை பிரஸ் கிளப் நிர்வாகிகள் காட்ட அதனை கவனத்துடன் பார்த்து பல்வேறு விளக்கம் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக மாவட்ட வருவாய் அதிகாரியை (DRO கண்ணபிரான்) அழைத்து பேசியதோடு மட்டுமல்லாமல் இன்னும் சில தினங்களில் வீட்டு மனை பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியரின் வாக்குறுதியை ஏற்று இன்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் அறிவித்துள்ளனர். பத்திரிகையாளர்களின் கோரிக்கையை நிதானமாக கேட்டறிந்து உடனடியாக பல்வேறு அதிகாரிகளை தொடர்புகொண்டு பத்திரிகையாளர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்த புதிய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் , அவர்களுக்கு பத்திரிகையாளர்கள் பலர் நன்றி தெரிவித்தனர் .தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்பு தூத்துக்குடி பத்திரிகையாளர்களுக்கு மானிய விலையில் வீட்டு மனை பட்டா கிடைக்கப்பெற்றால் மகிழ்ச்சி அளிக்கும் .
செய்தி தொகுப்பு ; எம் ஆத்தி முத்து
