வேதாரண்யத்தில் வேதாரணியம் நகராட்சி நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்க சிறப்பு தூய்மை பணி வார்டு எண் 10 ,16 ல் தொடக்கம்.
வேதாரணியம் ஜூலை 23
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் நகராட்சி சார்பில் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் சிறப்பு தூய்மை பணி 23.07.2022 ல் வார்டு எண் 10 மற்றும் 16 இல் உள்ள
வெட்டுக்குளம் மற்றும் அரியாண்டி குளம் ஆகியவற்றிலுள்ள குப்பைகளை அகற்றி தூய்மை செய்யும் பணி நடைபெற்றது. முதலில் நடைபெற்ற நிகழ்வில் வேதாரணியம் ராஜாஜி பூங்காவில் நகரங்களின் சிறப்பு தூய்மை பணிக்கான உறுதிமொழி நெகிழியை ஒழிப்போம் நீர் வளம் காப்போம் நெகிழி இல்லா வேதாரணியம் நகராட்சி உருவாக்குவோம் என்ற உறுதி மொழியை அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னர் நடந்த நிகழ்வில் பங்கு பெற்ற மக்களுக்கு மரக்கன்றுகள் அளிக்கப்பட்டன. மேலும் ராஜாஜி பூங்கா ஓரங்களில் மரக்கன்றுகள் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்களால் நடப்பட்டன.



இந்த நிகழ்வில் வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ. புகழேந்தி துணைத்தலைவர் மங்களநாயகி,நகராட்சி ஆணையர் V.ஹேமலதா, நகராட்சி பொறியாளர் கே. முகமது இப்ராஹிம்,
நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி ஊழியர்கள்
நகராட்சி தூய்மைப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களில்
உள்ள உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மேலும் தூய்மை பணி நடைபெறும் வெட்டுக்குளம் மட்டும் அரியாண்டி குளம் ஆகியவற்றில் நடைபெறும் பணிகளை நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மற்றும் நகர மன்ற ஆணையர் பார்வையிட்டார்கள். வார்டு எண் 10 மற்றும் 16 ல்
திடக்கழிவு மேலாண்மை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரச்சாரங்கள் வழங்கப்பட்டன.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

