வேதாரண்யத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் கழகம்(RSF) நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டம் .
வேதாரணியம் ஜூலை 22
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, முற்போக்கு மாணவர் கழகம் (RSF) நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் வேதாரணியம் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் இன்று மாலை நடைபெற்றது .தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கக் கோரியும், தொடர்ந்து பள்ளி கல்லூரிகளில் நடைபெறும் தொடர் படுகொலைகள் இனி நடைபெறாமல் இருக்க அரசு அதற்கென தனி சட்டம் இயற்ற கூறியும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் போதிய கட்டிட வசதி இல்லாமல் மாணவ மாணவிகள் வெளியில் அமர்ந்து படிக்கும் அவல நிலை உருவாகி உள்ளது எனவே மாணவ மாணவிகள் பயில கான்கிரீட் கட்டிடம் அமைத்து தரக்கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர தலைவர் குமார் தலைமையேற்க விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் கதிர்நிலவன், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் முருகன்,
துணை செயலாளர் சாதிக், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர்கள் வேங்கை தமிழ், ரவிச்சந்திரன், முற்போக்கு மாணவர் கழக மாவட்ட துணை அமைப்பாளர் புரட்சி வளவன்,தொகுதி அமைப்பாளர் சீமை இளையராஜா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி முற்போக்கு மாணவர் கழக(RSF) பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். விடுதலை அரசன் நன்றி உரையாற்றினார். இறுதியில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .

