வேதாரண்யத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேதாரண்யம் வட்டார கிளையின் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்.
வேதாரணியம் ஜூலை 21
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேதாரண்யம் வட்டார கிளையின் சார்பில் CPS
திட்டம் ரத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் V. அன்பழகன் தலைமை தாங்கினார்
துணை செயலாளர்கள் V. ராஜரத்தினம் M.S.சக்திதாசன் துணைத் தலைவர் S. விஜயகுமார் செயற்குழு உறுப்பினர் S. அய்யாத்துரை முன்னிலை வைக்கவும்
வட்டார செயலாளர் S.S. இளங்கோவன் வரவேற்புரை ஆற்றவும்
மாவட்ட பொருளாளர் P. எழில் மாறன் கோரிக்கை விளக்க உரை ஆற்றவும்
வட்டார பொருளாளர் T.ஜெயம் நன்றி உரை ஆற்றினார்
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வேதாரணியம் வட்டாரக்கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் .இறுதியில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

