நாகப்பட்டினத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் யாழிசை திருமண மண்டபத்தில் இளைஞர் திறன் திருவிழாவினை குத்துவிளக்கேற்றி மாவட்டஆட்சித் தலைவர் அ.அருண்தம்புராஜ்தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் ஜூலை 21 இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
தீன் தயாள் உபாத்யாயாகிராமின் கௌசல்யா யோஜனா என்பது கிராமப்புற ஏழை இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு திட்டமாகும்இத்திட்டம் இந்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் மாநில அரசின் மூலம் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தினால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தினை செயல்படுத்திட அனைத்து மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒவ்வொரு வட்டாரங்களிலும் ஒருவட்டார ஒருங்கிணைப்பாளர் திறன் நியமிக்கப்பட்டுள்ளனர் 2023 ஆம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் கிராமப்புற இளைஞர்களுக்கு மற்றும் சுளுநுவுஐ -திட்டத்தின் கீழ் 20,000 இளைஞர்களுக்கும் திறன் பயிற்சி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது இத்திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டு அனைத்து மாவட்டத்திற்கு உட்பட்ட வட்டாரங்களிலும் இளைஞர் திறன் திருவிழா நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இந்ததிறன் பயிற்சியில் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களிலிருந்து பயிற்சிப்பெற உள்ளனர். என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இப்பயிற்சியில் திட்ட இயக்குநர் மகளிர்திட்டம் பாலமுருகன், மற்றும் உதவித்திட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தித் தொகுப்புடாக்டர். எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

