வேதாரண்யத்தில் 24 பள்ளியின் மாணவ,மாணவிகள் பங்கேற்ற சதுரங்க விளையாட்டு போட்டி .
வேதாரண்யம் ஜூலை 21
சென்னை மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதையொட்டி செஸ் விளையாட்டை பற்றிய ஒரு விழிப்புணர்வு நிகழ்வாக நாகை மாவட்டம் வேதாரணியம் எஸ் .கே. சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில்
அரசு தொடக்க பள்ளி, நடுநிலை பள்ளி, உயர்நிலை பள்ளி, மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கான சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.


செஸ் விளையாட்டுப் போட்டிகளை எஸ். கே. சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் C.அன்பழகன் தொடங்கி வைத்தார்.
வேதாரணியம் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த 24 அரசு தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள்,மேல்நிலைப்பள்ளிகளின் மாணவ மாணவியர்கள் கலந்து கொண்ட செஸ் போட்டிக்கு அன்புமணி முதன்மை நடுவராகக் கொண்டு போட்டி நடத்தப்பட்டது. செஸ் போட்டிகளில் ஆறாம் வகுப்பு முதல், பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். செஸ் போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே நடத்தப்பட்டது. ஒலிம்பியாட் செஸ் போட்டியை ஒட்டி விழிப்புணர்வுக்காக நடந்த வேதாரணியம் ஒன்றிய அளவிலான போட்டிகளில் அரசு நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர்.எல்விஸ் லாய்
மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

