வேதாரண்யத்தில் வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்
வேதாரணியம் ஜூலை 19
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வேதாரணியம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன் காவல்துறை ஆய்வாளர் சுப்ரியா மற்றும் வேளாண்மைத் துறை, சுகாதாரத்துறை,நெடுஞ்சாலைத்துறை,மருத்துவத்துறை மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அந்தந்த துறை அதிகாரிகள் பதில் அளித்தனர்.

அனைத்து கோரிக்கைகளுக்கும் விரைவில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று
வேதாரணியம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் தெரிவித்தார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

