• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது?  தூத்துக்குடியில் ஆஷ் நினைவுச் சின்னத்தை புதுப்பிக்க கடும் எதிர்ப்பு!! அரசு நேரடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை!! 

policeseithitv by policeseithitv
July 18, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது?   தூத்துக்குடியில் ஆஷ் நினைவுச் சின்னத்தை புதுப்பிக்க கடும் எதிர்ப்பு!! அரசு நேரடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை!! 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது?

தூத்துக்குடியில் ஆஷ் நினைவுச் சின்னத்தை புதுப்பிக்க கடும் எதிர்ப்பு!! அரசு நேரடியாக தலையிட வேண்டும் என கோரிக்கை!!

 

தூத்துக்குடி ஜூலை 18

தூத்துக்குடியில் ஆஷ் நினைவுச் சின்னத்தை வீர வாஞ்சிநாதன் நினைவு தியாகச் சின்னமாக புதுப்பிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் கணேசன் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள மனு: தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் “ஸ்மார்ட் சிட்டி” திட்டத்தின் கீழ் பழமை மாறாத கட்டடங்களை புதுப்பிக்க சுமார் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது.

இதன் அடிப்படையில் தூத்துக்குடி தெற்கு புதுத்தெரு மாநகராட்சி நடுநிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது .

ஆனால், மேற்படி திட்டத்தில் தூத்துக்குடி பழைய துறைமுகம் எதிரே உள்ள ஆஷ் நினைவுச் சின்னம் புதுப்பிக்கும் பணியும் நடைபெறுவது வருத்தமளிக்கிறது.

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தின் தற்காலிக ஆட்சித் தலைவராகவும் நீதிபதியாகவும் இருந்த ஆஷ்துரை தான் தியாகச் செம்மல் நமது வ.உ.சி.தம்பரனார் இரட்டை ஆயுள் தண்டனை பெற முக்கியக் காரணமாக இருந்தார். ஆஷ் துரையை வீரத்தியாகி வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்று தன் இன்னுயிரையும் நாட்டிற்காக அர்ப்பணித்தார்.

அன்றைய ஆங்கிலேய அரசு, தனது அடக்குமுறை ஆட்சின் காப்பாற்றும் பணியில் உயிர் நீத்ததற்காக ஆஷ் நினைவுச் சின்னம் அமைத்து அவரை கெளரவித்தது. பழமை மாறாத கட்டடங்களை புதுப்பிக்கும் திட்டத்தில் அந்த நினைவுச் சின்னத்தை மீண்டும் புதுப்பிப்பது ஆஷ்துரையின் அராஜகத்தை அங்கீகரிப்பது போல் ஆகும். நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிவரும் வேளையில் அங்கு தேசபக்தர் வீர வாஞ்சிநாதன் திருவுருவச் சிலையை நிறுவி புதுப்பிக்க வேண்டும்.

அப்போது இந்நினைவுச் சின்னம் நாட்டுப்பற்றின், தியாகத்தின் நினைவுச் சின்னமாக மாறும். தூத்துக்குடிக்கு மகாத்மா காந்தி வருகை தந்து ஓர் இரவு தங்கிய இல்லம் மட்டக்கடையில் உள்ளது. அதேபோன்று காந்திஜி வழிபட்ட அருள்மிகு பிரசன்ன விநாயகர் ஆலயம், முதலான பல வரலாற்றுச் சிறப்ப வாய்ந்த கட்டடங்கள் நம் மாநகரில் இன்றும் பழைமையாகவே உள்ளது. அவற்றைப் புதுப்பிக்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். அதுபோல்

 

வேளாளர் உயர் மட்ட கமிட்டி சார்பாகவும் தமிழர் சமூகம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் திருப்பூர் ஆடிட்டர் மலர்வழி

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ அவர்களின் நேர்முக உதவியாளர் துரை மணி இடம் திருப்பூரில் இருந்து தொலைபேசி வாயிலாக ஆஷ் துரை மணிமண்டபம் கட்டிடப் பணிக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது

42 வருடங்கள் சுதந்திரப் போராட்டத் தியாகி

வ. உ .சிதம்பரம் பிள்ளைக்கு கடுங்காவல் தண்டனை கொடுத்த

கொடுங்கோலன்

ஆஷ் துறையின்

மணிமண்டப கட்டிட வேலைகளை

தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் புனரமைப்பு பணிக்காக மக்கள் வரிப்பணம் 5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்

பணம் வீணடிக்கும் வகையில் நடைபெறும் இந்த பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் மாநகராட்சி ஆணையரும் மாநகராட்சி மேயரும் அதற்காகவும் செலவு தொகையினை தங்களது சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும் எனவும் மாநகராட்சி நிர்வாக நிதியில் செலவு செய்யக்கூடாது அப்படியே இதுவரை செலவு செய்த தொகையை கருவூலத்தில் செலுத்த வேண்டும் என ஆடிட்டர் தெரிவித்த ஆடியோ பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது

தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ அவர்களின் நேர்முக உதவியாளர் துரைமணி அவர்களிடம்

வேளாளர் உயர் மட்ட கமிட்டி சார்பாகவும் தமிழர் சமூகம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாகவும் திருப்பூர் ஆடிட்டர் மலர்வழி அவர்கள் பேசிய ஆடியோவின் முழு பதிவு வெளியாகி உள்ள நிலையில் இந்தப் பணியை உடனடியாக தடுத்து நிறுத்த வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் போர்க்கொடி தூக்க ஆரம்பித்து விட்டனர் 5 கோடி நிதியை முறையாக செலவிட வேண்டும் என்ற குற்றச்சாட்டு தற்போது எழுந்துள்ளது மேலும் 5 கோடி மதிப்பில் நடைபெறும் அந்த பணிகளை கண்காணிக்க அரசு உயர்மட்ட குழு அமைக்க வேண்டும் என்று கோரிக்கையும் பல்வேறு அமைப்பினர்கள் மூலம் வலுத்து வருகிறது. இந்த விவகாரத்தால் ஸ்மார்ட் திட்டப் பணிகள் அனைத்தும் முறைப்படி நடைபெறுகிறதா என்ற சந்தேகத்தை கிளப்புகிறது என்ற குற்றச்சாட்டும் பொதுமக்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

Previous Post

ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் “தமிழ்நாடு நாள்” கொண்டாட்டம்

Next Post

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலரை பணியில் இருந்து நீக்கம் செய்து அதிரடி உத்தரவு

Next Post
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலரை பணியில் இருந்து நீக்கம் செய்து அதிரடி உத்தரவு

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற காவலரை பணியில் இருந்து நீக்கம் செய்து அதிரடி உத்தரவு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In