தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய
3வது வார்டு
ஒன்றிய குழு உறுப்பினர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார்
வாழ்த்து தெரிவித்தார்.
தூத்துக்குடி,
ஜூலை,18
தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி 3வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினர் மறைவையொட்டி ஊரக உள்ளாட்சி துறையின் கீழ் காலியான பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய 3வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினராக தொம்மை சேவியர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய குழு அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவிற்கு ஒன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர் தலைமையில் உறுதிமொழி எடுத்து தொம்மை சேவியர் ஒன்றிய குழு உறுப்பினராக பொறுப்பேற்றுக்கொண்டார்.

பின்னர் ஓன்றிய குழு தலைவர் வசுமதி அம்பாசங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்ராஜ், ஒன்றிய கவுன்சிலர்கள் அந்தோணி தனுஷ்பாலன், முத்துக்குமார், ஜெயகணபதி, செல்வபார்வதி, சுதர்சனன், முத்துலட்சுமி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.
இதனையடுத்து மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார், கூட்டுறவு கடன்சங்க துணை தலைவர் சிவகுமார், தெற்கு மாவட்ட திமுக சுற்றுச்சுழல் அணி அமைப்பாளர் ரவி என்ற பொன்பாண்டி மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் கணேசன், மாவட்ட பிரதிநிதி சப்பாணிமுத்து, ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, ஒன்றிய துணைச்செயலாளர் ஹரிபாலகிருஷ்ணன், மற்றும் கௌதம், ஆகியோர் பொறுப்பேற்றுக்கொண்ட ஒன்றிய குழு உறுப்பினருக்கு சால்வை அணிவித்தனர்.

