வேதாரண்யத்தில் பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி வட்டார விவசாயிகள் சங்கத்தினர் தொடர் காத்திருப்புப் போராட்டம்
வேதாரணியம் ஜூலை 18
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட எள், பயறு, உளுந்து பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி வட்டார விவசாயிகள் சங்கத்தினர் வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
2022ஆம் ஆண்டு அறுவடைக்குப் பிந்தைய பருவம் தவறி பெய்த மழையினால் நாகை மாவட்டத்தில் பயிரிடப்பட்ட உளுந்து, பயறு, எள் ஆகியவை முற்றிலும் பாதிக்கப்பட்டு தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டு இயக்கத்தின் சார்பில் 20.4 .2002 அன்று நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் 19 .4.2022
அன்று பிற்பகல் 4 மணிக்கு நாகை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் வேளாண்மைத் துறை அலுவலர்கள் முன்னிலையில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று அரசுக்கு கருத்துரு அனுப்பி நிதி கிடைத்தவுடன் இழப்பீடு தொகை வழங்கப்படும் என்று உறுதி அழைத்ததன் அடிப்படையில் தற்போது நிதி கிடைக்கப்பெற்று விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் வேதாரணியம் வருவாய்த் துறையிலிருந்து மட்டும் பயனாளிகள் பட்டியல் அனுப்பாததால் இழப்பீட்டுத் தொகை வழங்க முடியவில்லை என்று நாகை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கூறியதால்
கடந்த 1.7 .2022 அன்று வேதாரணியம் வட்டாட்சியர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை இட்டபோது பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி 3.7. 2022 ஆம் தேதி வேளாண்மைத் துறை துறை புள்ளியியல்துறை வருவாய் துறை மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் இணைந்து ஆய்வு கூட்டம் நடத்தப்படும் என்று வட்டாட்சியர் அறிவித்த நிலையில் இன்று வரை விவசாயிகளுக்கு எவ்வித தகவலும் தராத நிலையில் மாவட்ட ஆட்சியரின் உறுதி மொழியை காப்பாற்றவும் பயனாளிகள் பட்டியலை அனுப்பி இழப்பீட்டு தொகையை விவ சாயிகள் வங்கிக் கணக்கில் வரவு வைத்து விடவும் இன்று 18. 7 .22 அன்று காலவரையற்ற காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று விவசாய சங்கத்தினர் தெரிவித்த நிலையில் வட்டாட்சியர் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து விவசாய சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார் .இந்தப் பேச்சுவார்த்தையில் வேளாண்மை துறை புள்ளியியல் துறை வருவாய் துறை இணைந்து
பாதிக்கப்பட்ட பயிர் கணக்கு எடுத்து மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டு பயனாளிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்று உறுதி அளித்ததன் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்தப் போராட்டத்தில் வட்டார விவசாயிகள் சங்கத் தலைவர் T.V.இராஜன்
செயலாளர் ஒளி சந்திரன் பொருளாளர் அருண்குமார் செய்தித் தொடர்பாளர் ஆதி குமார் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
செய்தித் தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர் .

