தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 ஆய்வாளர்கள் உட்பட 68 காவல்துறையினருக்கு, எஸ்.பி.பாலாஜி சரவணன் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
தூத்துக்குடி ஜூலை 16
தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த சந்தேக மரண வழக்கில் தீவிர புலன் விசாரணை செய்து 24 மணி நேரத்திற்குள் கொலை வழக்காக மாற்றம் செய்து வழக்கில் சம்மந்நதப்பட்ட எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ரபி சுஜின் ஜோஸ், மத்தியபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகபெருமாள், வடபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் பாலசுப்பிரமணியன், ரோஸ்லின், மத்தியபாகம் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் மணிமாறன் மற்றும் முனீஸ்வரன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,*
*♻️குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நான்கு சக்கர வாகனத்தில் வந்த நபர்களை தாக்கி ரூபாய் 10 லட்சம் பணத்தை வழிப்பறி செய்த வழக்கில் 5 எதிரிகளை கைது செய்து ரூபாய் 9,30,000/-பணத்தை பறிமுதல் செய்த குலசேகரபட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் ரெகுராஜன், சிறப்பு உதவி ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், திருச்செந்தூர் போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் ராஜகுமார், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய தலைமை காவலர் இசக்கியப்பன், ஆறுமுகநேரி காவல் நிலைய தலைமை காவலர் சொர்ணராஜ், குலசேகரபட்டினம் காவல் நிலைய முதல் நிலை காவலர் அருள்ஜோதி மற்றும் திருச்செந்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் கார்த்திக் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,*
*♻️ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த திருட்டு வழக்கில் சம்மந்தப்படட 3 எதிரிகளை திருப்பூர் சென்று கைது செய்தும், வழக்கின் சொத்தான ரூபாய் 5,63,000/- மதிப்புள்ள 102 பன்றிகளை மீட்ட ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ், உதவி ஆய்வாளர் அருள் சாம்ராஜ், முதல் நிலை காவலர்கள் சுந்தர், ஹரிஹரன் மற்றும் காவலர் வெங்கடேஷ் விஜய் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,*
*♻️வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் 3 எதிரிகளையும் வழக்குபதிவு செய்த ஒரு மணி நேரத்தில் துப்புகள் வைத்து பிடித்து கைது செய்த வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவராஜா என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,*
*♻️முறப்பநாடு காவல் நிலைய தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை சட்டவிரோதமாக கடத்திய வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரிகளின் வங்கி கணக்கi முடக்கம் செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு பெங்களூர் சென்று எதிரிகளின் வங்கி கணக்கில் இருந்த பணம் ரூபாய் 14,41,802/-த்தை அதிவிரைவாக முடக்கம் செய்ய முறப்பநாடு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார், தலைமை காவலர் வெங்கடாசலபெருமாள் மற்றும் காவலர் ரவிக்குமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,*
*♻️முத்தையாபுரம் சுபாஷ் நகரை சேர்ந்த கிஷோர் டேனியல் என்பவர் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் செயலை வழக்கமாக செய்து வந்தததால் இவரது நடவடிக்கையை கட்டுபடுத்த 107 கு.வி.மு.ச வின்படி 6 மாதத்திற்கு பிணைபத்திரம் எழுதிக் கொடுத்தவர் பிணைபத்திரத்தின் உத்தரவினை மீறி குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட காரணத்தினால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி தூத்துக்குடி கோட்டாட்சியர் அவர்களிடத்தில் நடவடிக்கை எடுக்க ஆவண செய்து கிஷோர் டேனியல் என்பவரை 09.12.2022 வரை காவல் அடைப்பு செய்த முத்தையாபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜன் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,*
*♻️ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற அடிதடி வழக்கில் சம்மந்தப்பட்ட 2 எதிரிகளை கைது செய்த ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி மற்றும் முதல் நிலை காவலர் மாரியப்பன் மற்றும் ஏரல் காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் சரவணக்குமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,*
*♻️நாசரேத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த மின்சார ஊழியர் கொலை வழக்கில் எதிரிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வந்த நிலையில் துரிதமாக விசாரணை செய்து இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க துணையாக இருந்த மத்திய குற்றபிரிவு உதவி ஆய்வாளர் ராஜபிரபு, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலை சிறப்பு உதவி ஆய்வாளர் பிரடரிக் ராஜன், நாலாட்டின்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் மணிகண்டன், தட்டார்மடம் காவல் நிலைய முதல் நிலை காவலர் மணிகண்டன், செய்துங்கநல்லூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் காசி, நாசரேத் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் அந்தோணி ஜேம்ஸ் பிரதீஸ், ஆயுதப்படை காவலர்கள் சக்தி மாரிமுத்து, டேவிட்ராஜன், சண்முகையா, சுடலைமணி, கதிரவன் மற்றும் முருகன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,*
*♻️தூத்துக்குடி மாவட்டத்தில் பழிக்குபழியாக நடைபெறும் கொலை சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, சம்மந்தப்பட்ட எதிரிகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட தனிப்பிரிவில் சிறப்பாக பணிபுரிந்த வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் குமரேசன், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர், ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மாணிக்கராஜா, சைபர் கிரைம் உதவி ஆய்வாளர் வசந்தகுமார், செய்துங்கநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ், கடம்பூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரமேஷ்குமார், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜேஷ்கண்ணா மற்றும் தருவைகுளம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சரவணன் ஆகியேரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,*
*♻️கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய குற்ற வழக்குகளில் கோவில்பட்டி நீதித்துறை நடுவர் எண் II லோக்அதாலத் காலத்தில் 190 வழக்குகளை விரைந்து கோப்புக்கு எடுக்க செய்து வழக்குகளை முடிக்க உறுதுணையாக இருந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய தலைமை காவலர் வைரமுத்து மற்றும் காவலர் முத்துராமலிங்கம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,*
*♻️நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கில் வழக்குபதிவு செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் வழக்கின் எதிரியை பற்றி துப்பு கொடுத்து வழக்கில் மேலும் 2 எதிரிகள் மற்றும் வழக்கின் சொத்துக்களான 26 கிராம் தங்க நகைகள் மற்றும் ரூபாய் 25,320/- பணம் ஆகியவற்றை கைப்பற்ற உதவியாக இருந்த நாரைக்கிணறு காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் சரவணன் என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,*
*♻️தமிழ்நாடு காவல்துறையில் பயன்படுத்தப்படும் முகத்தை வைத்து அடையாளம் காணும் மென்பொருளை பயன்படுத்தி கடந்த மாதத்தில் 10 வழக்குகளில் சம்மந்நதப்பட்ட எதிரிகளின் முன்நடத்தை விபரங்களை தேடி கண்டுபிடித்த கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் விஜயலெட்சுமி என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,*
*♻️வெள்ளப்பட்டி சோதனை சாவடி அருகே ஒரு இரு சக்கர வாகனம் கேட்பாரற்று கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மேற்படி வாகனத்தின விவரம் பற்றி சி.சி.டி.என்.எஸ் மூலம் தேடி பார்த்தபோது அந்த வாகனத்தை காணவில்லை என தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் மனுரசீது போடப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து தகவல் தெரிவித்த தாளமுத்துநகர் காவல் நிலைய முதல் நிலை காவலர் முருகேஸ்வரி என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,*
*♻️தூத்துக்குடி மாவட்டத்தில் பழிக்குபழியாக நடைபெறும் கொலை சம்பவங்களை தடுக்கும் பொருட்டு, சம்மந்தப்பட்ட எதிரிகளை கண்காணிக்க அமைக்கப்பட்ட தனிப்பிரிவில் சிறப்பாக பணிபுரிந்த தென்பாகம் காவல் நிலைய காவலர் மரிய ஜெகதீஸ், தாளமுத்துநகர் காவல் நிலைய காவலர்கள் ஜான்சன், மாதவன், சிப்காட் காவல் நிலைய முதல் நிலை காவலர் பாலகுமார், குலசேகரபட்டினம் காவல் நிலைய காவலர் சுந்தரராஜ், திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய முதல் நிலை காவலர் முருகேஷ்பாபு, சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் பாண்டியராஜ், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய காவலர் மாரியப்பன், செய்துங்கநல்லூர் காவல் நிலைய காவலர் செல்வக்குமார், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் அனுவிந்த் குமார், கடம்பூர் காவல் நிலைய காவலர் பூவரசு, கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய முதல் நிலை காவலர் ஆறுமுகதுரை, காவலர் சுப்பையா, வடபாகம் காவல் நிலைய காவலர் ராஜா, குளத்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் ஆலோசணை சுரேஷ், மற்றும் தட்டார்மடம் காவல் நிலைய காவலர் சுபராஜன் ஆகியேரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,*
*♻️தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற கொலை மற்றும் குற்ற வழக்குகளில் சம்பவம் நடந்நதது பற்றி மிக துல்லியமாக ஆராய்ந்து புலன் விசாரணை அதிகாரிக்கு துணை இருந்த தூத்துக்குடி தடய அறிவியல் துறை உதவி இயக்குநர் கலாலெட்சுமி என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,*
*♻️3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 68 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் அவர்கள் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார். மேலும் மாதாந்திர காவல்துறை வாகன ஆய்வில் காவல் வாகனங்களை சிறப்பாக பராமரித்த முதல் நிலை காவலர்கள் கண்ணன், சண்முகம், முத்துகுமார் மற்றும் காவலர் முத்துபாண்டியன் ஆகிய 4 பேருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பரிசு வழங்கி பாராட்டினார்.*

*♻️இந்நிகழ்வின்போது தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்ற தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பிரகாஷ் பாபு, தூத்துக்குடி சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் லயோலா இக்னேஷியஸ் உள்ளிட்ட காவல்துறையினர் உடனிருந்தனர்.*

