செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
நாகை ஜூலை 16
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதையொட்டிநாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கில் செஸ் ஒலிபியாட் போட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ் தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது :
உலகளாவிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறுவது நம் மாநிலத்திற்கும் நம் நாட்டிற்கும் பெருமை சேர்ப்பதாகும். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தினமும் செஸ் விளையாடுவதால் நம்முடைய வாழ்வில் ஏற்படும் பயன்கள் மாற்றங்களை குழந்தைகளிடையே பகிர்ந்து கொள்வதாகும் பொதுவாகவே மருத்துவர்களும், பொதுமக்களுமே மனித மூளை வேலை செய்ய செஸ் விளையாட்டைத் தவிர சிறந்த பயிற்சி ஏதுமில்லை என தெரிவித்துள்ளனர். மேலும் இவ்விளையாட்டானது நினைவாற்றலை அதிகரிக்கவும் மனதை ஒருமுகப்படுத்தவும், திடமான எண்ணத்தை உருவாக்கவும் இவ்விளையாட்டு பயன்வுள்ளதாக அமைகிறது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி குறிப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்

