தூத்துக்குடி, ஜூலை 16
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பதவி கடந்த 2016 முதல் காலியாக இருந்த நிலையில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மேயர் இல்லாததால் தனி அதிகாரி மூலம் மாநகராட்சி நிர்வாகம் இயங்கி வந்தது. இந்த காலகட்டத்தில் மாநகராட்சியில் பல வார்டுகளில் மக்கள் அடிப்படை பிரச்சனை தீர்க்கப்படாத சூழ்நிலை காணப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் பொதுமக்கள் மத்தியில் எழுந்து வந்தது. கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடத்தாமல்
இழுத்தடிப்பு செய்த காரணத்தினால்
இந்த அவல நிலை தொடர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் திமுக ஆட்சி அமைத்த உடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இருந்த காரணத்தினால் தங்கள் வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகள் கேள்விக்குறியாகி வருவதை உணர்ந்த பொதுமக்கள் இந்த முறை திமுக சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிட்ட
ஜெகன் பெரியசாமிக்கும் திமுக மாமன்ற உறுப்பினர்கள் பலரும் வெற்றி பெறும் வகையில் பொதுமக்கள் வாக்குகளை பெருவாரியாக அளித்தனர். தூத்துக்குடி மாநகராட்சி மேயராக பொறுப்பேற்ற ஜெகன் பெரியசாமி பதவியேற்ற தினத்திலிருந்து மாநகரின் வளர்ச்சி பணிகள் மற்றும் பொதுமக்களின் அடிப்படை பிரச்சினையை கருத்தில் கொண்டு இரவு பகல் பாராமல் பம்பரமாக சுழன்று வருகிறார். இவருக்கு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோரும் பக்கபலமாக இருந்து வருகிறார்கள். இளைஞரான மேயர் ஜெகன் பெரியசாமி தூத்துக்குடி மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிக்காக ஓய்வறியாமல் நாள்தோறும் பணியாற்றி வருவதை கண்டு தூத்துக்குடி மாநகர மக்கள் மனதார பாராட்டி வருகிறார்கள். தூத்துக்குடியில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் திட்டப் பணிகளை நேர்மையாகவும் அதே சமயத்தில் காலதாமதம் இல்லாமல் விரைவில் முடிக்க வேண்டுமென மேயர் ஜெகன் பெரியசாமி அறிவுறுத்தி வந்ததன் பெயரில் ஸ்மார்ட் திட்ட பணிகள் தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் மின்னல் வேகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த அடிப்படையில்
தூத்துக்குடி மாநகரின் முக்கிய சந்திப்புகளில் உயர் மின் விளக்கு கோபுரங்கள் நிறுவப்படும் என்றும்
நகரின் முக்கிய வீதிகள் இரவு நேரத்தில் ஓளிரும் வண்ணமாக விரைவில் திகழும் என
மேயர் ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற நேரத்தில் மக்களுக்கு உறுதியளித்தார் . அந்தப் பணிகளை நிறைவேற்றும் வகையில்
நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவும் முக்கிய சாலை சந்திப்புகளில் இரவு நேரத்தில் ஓளிரும் வண்ணமாக உயர் மின்விளக்கு கோபுரங்களை அமைக்கும் பணியை தீவிர்படுத்தி வருகிறார். இன்று பெல் ஓட்டல் அருகே மாதா கோவில் செல்லும் பிரதான சாலையில் உயர் மின் கோபுர விளக்க அமைக்கும் பணியை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பணியை துரிதப்படுத்தினார்.
பனிமயமாதா கோவில் திருவிழா நடைபெற இருக்கும் நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளை கண்டறிந்து அந்த பகுதிகளில் முதல் கட்டமாக உயர் கோபுர மின்விளக்கு அமைக்கும் பணியை
மேயர் ஜெகன் பெரியசாமி துரிதப்படுத்தி வருகிறார். மேயர் உடன் மாமன்ற உறுப்பினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகர் முழுவதும் இரவு பகல் பாராமல் மக்கள் பணியில் ஈடுபடும் தூத்துக்குடி மாநகராட்சி ஜெகன் பெரியசாமிக்கு பொதுமக்கள் சார்பில் பாராட்டுகள் குவிகிறது.

