வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (இந்து)
பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம்.
வேதாரணியம் ஜூலை 15
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் (இந்து)
பள்ளி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.இந்தப் பொதுக்குழு கூட்டத்திற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் G. கோவிந்தராஜுலு தலைமை ஏற்க பள்ளி மேலாண்மை குழு தலைவர் M.நிஷாந்தி முன்னிலை
வகித்தார்கள்.பள்ளி தலைமையாசிரியர் புயல் குமார் என்கிற தட்சிணாமூர்த்தி வரவேற்புரை வழங்கினார்கள். முன்னாள் பெற்றோர்-ஆசிரியர் கழக தலைவர்கள் A. நாகூரான்,
M. வீரப்பன் S ராகவன்
நகர்மன்ற உறுப்பினர்கள் G.அம்சவள்ளி,M.உமா மகேஸ்வரி
மற்றும் பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர் R. முருகானந்தம் நன்றி உரையாற்றினார் செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

