தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 120 வது பிறந்தநாள் விழா மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது
மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் ரவிசேகர் மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணிபிச்சை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தூத்துக்குடியில் காய்கனி மார்க்கெட், பழைய முனிசிபல் ,ஆபீஸ் வ உ சி மார்க்கெட், காமராஜ் காலேஜ் ஆகிய பகுதியில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு தூத்துக்குடி மாநகரமே விழாக்கோலம் கொண்டது.
தெருவெங்கிலும் பெருந்தலைவர் காமராஜரின் அலங்கரிக்கப்பட்ட திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் பெருந்தலைவர் காமராஜரின் புகழ் பரப்பும் பாடல்களை ஒளிபரப்பியும் இருந்தனர். பெருந்தலைவர் காமராஜரின் சாதனைகளை பரப்பு விதமாக வால்போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. மேலும் பொதுமக்களுக்கு ஆங்காங்கே இனிப்புகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவை தலைவர் கண்டிவேல் மாவட்ட பொருளாளர் அருண் சுரேஷ்குமார் மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ் பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ் பிரதிநிதி பெரியசாமி இளைஞர் அணிச் செயலாளர் டேனியல் ராஜ் மாணவர் அணி செயலாளர் அகஸ்டின் தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் வர்த்தக அணி செயலாளர் முத்துக்குமார் விவசாய அணி செயலாளர் சரவணன் தொழிலாளர் அணி செயலாளர் ஜெகன் பண்ணையார் மீனவர் அணி செயலாளர் விக்ரம் மாநகரச் செயலாளர் உதயசூரியன் அவைத்தலைவர் மதியழகன் பொருளாளர் சந்தனகுமார் தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் பாரத் ஆத்தூர் நகர செயலாளர் கனகராஜ் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

