தூத்துக்குடி, ஜூலை 15
காமராஜர் 120 வது பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு அனைத்துக் கட்சியினர் மாலை அணிவித்தனர்.
மாவட்ட முழுவதும் அனைத்து பகுதிகளிலும் காமராஜர் பாடல்
காலையிலிருந்து ஒலித்தது , வணிகர்கள் வியாபாரிகள் பொதுமக்கள் பல்வேறு அமைப்பு சார்ந்தவர்கள் காமராஜர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். மேலும் பல்வேறு இடங்களில் அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது மாணவ மாணவியர்களுக்கு இலவச நோட்புகள் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும்
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் காமராஜரின் 120 வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
வடக்கு மாவட்ட திமுக சார்பில் பொதுக்குழு உறுப்பினரும் மேயருமான ஜெகன் பெரியசாமி தலைமையில் வஉசி மார்க்கெட் அருகிலுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனிட்டா, மாநில மீனவரணி துணை அமைப்பாளர் புளோரன்ஸ், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநகராட்சி மண்டலத்தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர துணைச்செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், மாவட்ட அணி செயலாளர்கள் ரமேஷ், கஸ்தூரி தங்கம், மோகன்தாஸ், அந்தோணிஸ்டாலின், மதியழகன், ஜெபசிங், மாவட்ட துணை அமைப்பாளர்கள் நலம் ராஜேந்திரன், பிரதீப், முத்துதுரை, மாநகர தொண்டரணி அமைப்பாளர் முருகஇசக்கி, மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, ஆதிதிராவிடர் நலஅணி துணை அமைப்பாளர் பால்ராஜ், வர்த்தக அணி துணை அமைப்பாளர் கிறிஸ்டோபர், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அந்தோணிகண்ணன், மாணவரணி துணை அமைப்பாளர் பால்மாரி, பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், மேகநாதன், பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் ரவி, கவுன்சிலர்கள் சரவணக்குமார், வைதேகி, விஜயகுமார், பொன்னப்பன், வட்டச்செயலாளர்கள் சுப்பையா, சதிஷ்குமார், கங்கா, கீதா செல்வமாரியப்பன், வட்டப்பிரதிநிதிகள் பிரபாகர், லிங்கராஜா, ஜெபசிங், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது சிலைக்கு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ். முரளிதரன் தலைமையில், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ, ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு லட்டு வழங்கினார் கள்.
நிகழ்ச்சிகளில் முன்னாள் எம்.எல்.ஏ சுடலையாண்டி, மண்டல தலைவர்கள் ராஜன், ஜசன்சில்வா, சேகர், செந்தூர்பாண்டி, மாநகர் மாவட்ட அமைப்பு சாரா தொழிற்சங்க தலைவர் நிர்மல் கிறிஸ்டோபர், மகிளா காங்கிரஸ் தலைவி தனலட்சுமி, முன்னாள் மாவட்ட தலைவர் அருள், ஊடக பிரிவு மாவட்ட தலைவர் முத்துமணி, மாநகர துணை தலைவர்கள் பிரபாகரன், அருணாசலம், பிரபாகர், மாநகர மாவட்ட பொதுச்செயலார் ராஜா, மாவட்ட செயலாளர்கள் கோபால், ஜெயராஜ், சேகர், காங்கிரஸ் எடிசன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தலைவர் அன்புராஜ் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் மரகதராஜ், ஆகியோர் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் தணிக்கையாளர் முத்துபாலகிருஷ்ணன், ராஜா, செல்வக்குமார், உத்திரபாண்டி, ஜோசப், பட்டுராஜா, உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

காமராஜர் காய்கனி மார்க்கெட்டில் உள்ள அவரது சிலைக்கு கீழுர் கூட்டுறவு வங்கி தலைவர் ஞான்ராஜ் தலைமையில் மாலை அணிவித்தனர். நிகழ்ச்சியில் மார்க்கெட் மேலாளர் நியூட்டன் உதவி மேலாளர் ரவி மற்றும் பிச்சமுத்து, செல்வக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விவிடி நினைவு ஆரம்ப பள்ளியில் 3 முதல் 5ம் வகுப்பு வரை மாணவ மாணவிகளுக்கான ஓவிய போட்டியில் காமராஜர் சிதம்பரனார் பாரதியார் ஆகிய படங்களை சிறப்பாக வரைந்து வெற்றி பெற்ற முதல் 3 மாணவர்களுக்கு மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரணவக்குமார் பரிசுகளை வழங்கினார். விழாவில் காமராஜர் நற்பனி மன்ற மாவட்ட தலைவர் லாரன்ஸ் பொருளாளர் ஆஸ்வால்ட், ஒன்றிய கவுன்சிலர் பாலன், மாநகராட்சி கவுன்சிலர் அந்தோணிபிரகாஷ் மார்ஷல், ஊராட்சி மன்ற உறுப்பினர் ஸ்டாலின், தலைமை ஆசிரியர் ஜெயவேணி, நாடார் மகாஜன சங்க துணைத்தலைவர் சதிஷ், அன்னை தெராசா நற்பனி மன்ற தலைவர் தொம்மை அந்தோணி, காமராஜர் நற்பனி மன்ற அமைப்பாளர் ரவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிலுவைப்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமர் இனிப்பு வழங்கினார். ஒன்றிய கவுன்சிலர்கள் பாலன், தொம்மைசேவியர், ஊராட்சி மன்ற உறுப்பினர் பாரதிராஜா, பாலம்மாள், ஜெயசீலன், கிளை செயலாளர் அம்புரோஸ், மீனவரணி ஆரோக்கியம், நிர்வாகிகள் செல்வராஜ், திராவிட செல்வி, சவேர்ரியார்புரம் பங்கு தந்தை குழந்தை ராஜா, மற்றும் ராயப்பன், சேவியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மாலை அணிவித்தனர். நிர்வாகிகள் கண்டிவேல், உதயசூரியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தெர்மல்நகரில் வியாபாரிகள் சங்க தலைவர் மந்திரமூர்த்தி தலைமையில் மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது. நிர்வாகிகள் ஜார்ஜ்புஷ், லட்சுமணதாஸ், முத்துகுமார், பெத்துராஜ், தமிழ்செல்வன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

