வேதாரண்யத்தில் வேதாரணியம் சி.க.சுப்பையா அரசு மேனிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் பள்ளி வளர்ச்சிக்கு நிதி வழங்கல்.
வேதாரண்யம் ஜூலை 14
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரணியம் சி. க. சுப்பையா அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி முன்னாள் மாணவர்கள் 13.07.2022
பள்ளி வளர்ச்சிக்கு நிதி உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சி அன்பழகன் தலைமை தாங்கினார் ஆசிரியர் க. இளஞ்செழியன் வரவேற்றார் . 2009 முதல் 2013 ஆம் கல்வி ஆண்டு வரை பயின்ற 80 பேர் கொண்ட மாணவர்கள் சார்பாக பள்ளியில் மரக்கன்றுகள் நட்டு அதை பராமரிப்பதற்கும்,மரக்கன்றுகள் நடப்பட்ட பகுதியை சுற்றி வேலி அமைப்பதற்கும் ரூபாய் 27 ஆயிரத்து 300 நிதி உதவி அளிக்கப்பட்டது. மேலும் அந்த மாணவர்கள் கூறும்போது பள்ளி சுற்றுச் சுவருக்கு வண்ணம் தீட்ட நிதி உதவி வழங்க இருப்பதாகவும் கூறினார்கள். மேலும் 2013 14 ஆம் கல்வி ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த 18 மாணவர்களின் சார்பாக ரூபாய் 25 ஆயிரம் மதிப்பீட்டில் வகுப்பறையில் பயன்படுத்த 12 மின்விசிறிகள் வழங்கப்பட்டது.

மேலும் இந்த விழாவில் ஆசிரியர்கள் சு. தியாகராஜன் சி. நாகராஜன் ப.சிவகுமார் ஆகியோர் முன்னாள் மாணவர்களை வாழ்த்தி பேசினார்கள் .இந்த மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சு. எழிலரசன் மற்றும் தி.
சுப்பிரமணியசாமி செய்திருந்தனர் .முன்னாள் மாணவர்கள் கார்த்திகேயன் , செல்வகணபதி ஆகியோர் ஏற்புரை வழங்கினார்கள். நிகழ்ச்சிகளை ஆசிரியர் கோ. ஆதவன் தொகுத்து வழங்கினார்கள் ஆசிரியர் வி.அன்பழகன் நன்றி கூறினார்.இந்த நிகழ்வில் அனைத்து மாணவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

