தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 4.96 கோடியில் புதிதாக கட்டப்பட்ட கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய காவலர் குடியிருப்பை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று காணொளி மூலம் திறந்து வைத்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் இன்று காவலர் குடியிருப்பில் குத்துவிளக்கேற்றி வைத்தார்.

தமிழக அரசு உத்தரவின்பேரில் திருநெல்வேலி கோட்டம் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரியம் மூலம் ரூபாய் 4.96 கோடி செலவில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையம் அருகில் காவலர்களுக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள 35 குடியிருப்புகளை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இன்று (13.02.2021) காணொளி மூலம் திறந்து வைத்தார்.
மேற்படி புதிதாக கட்டப்பட்ட குடியிருப்புகளை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பார்வையிட்டு காவலர் குடியிருப்பில் குத்துவிளக்கேற்றி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது கோவில்பட்டி துணை காவல் கண்காணிப்பளார் திரு. கலைக் கதிரவன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் திரு. சுதேசன், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பத்மாவதி, கோவில்பட்டி குற்ற பிரிவு ஆய்வாளர் திருமதி. ராணி உள்ளிட்ட காவல்துறையினர் பலர் உடனிருந்தனர்.
