தமிழகத்திற்கு வருகிற சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் பல்வேறு ஆயத்தப்பணிகளையும், ஆலோசனைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நெல்லை சரக காவல்துறைக்குட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டத்தில் பணியாற்றும் 92 காவல் ஆய்வாளர்கள் முதற்கட்டமாக அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, தூத்துக்குடி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய காவல் ஆய்வாளர் ஞானராஜ் கன்னியாகுமரி மாவட்டம் அருமனைக்கு மாற்றப்பட்டார். தூத்துக்குடி மத்திய பாகம் காவல்நிலையத்தில் பணியாற்றிய ஜெயபிரகாஷ் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார். ஆத்தூர் காவல்நிலையத்தில் பணியாற்றிய கிங்ஸ்லி தேவானந்த் நெல்லை மாவட்டம் வள்ளியூருக்கு மாற்றப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அனைத்து மகளிர் காவல்நிலையம் காவல் ஆய்வாளர் வின்செண்ட் அன்பரசி தூத்துக்குடி மத்தியபாகம் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார். பசுவந்தனை காவல்ஆய்வாளர் ஜி.பாஸ்கரன் குலசேகரம் காவல்நிலையம் கன்னியாகுமரி மாவட்டத்திற்க்கு மாற்றப்பட்டார். ஜோசப் ஜெட்சன் ஸ்ரீவைகுண்டம் காவல்நிலையத்திலிருந்து நெல்லை மாவட்டம் நான்குநேரிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றிய வி.சாந்தி தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சி காவல்நிலையத்தில் பணியாற்றிய பட்டாணி கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் பணியாற்றிய எஸ்.வனிதா நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை காவல் ஆய்வாளராக பணியாற்றிய எஸ்.சியாம்சுந்தர் கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
இவ்வாறு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பணியாற்றிய காவல்துறை ஆய்வாளர்கள் 92 பேர் முதற்கட்டமாக தேர்தல் பணியை முன்னிட்டு அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோல், காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் அந்தந்த மாவட்டத்தில் மூன்றாண்டு தொடர்ந்து பணியாற்றியவர்கள் மாற்றம் செய்யப்படக்கூடும் என தெரியவருகிறது.
